தேவதையை தேடினோம் மியா ஜார்ஜ் கிடைத்தார்!

‘திருடன் போலீஸ்’ என்றொரு படம் வந்ததே…. அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய படமா அது? அப்படத்தின் வெற்றிக்குப்பின் அதே அக்கறையோடு கதை தேடிய கெனன்யா செல்வகுமாருக்கு கிடைத்தவர்தான் நெல்சன் வெங்கடேசன். இவரும் இவரது தமிழ் வாத்தியாருமாக சேர்ந்து உருவாக்கிய ஒரு நாள் கூத்து கதையை கேட்ட செல்வகுமார், ஆன் த ஸ்பாட்டில் அட்வான்ஸ் கொடுக்க, அதற்கப்புறம் மளமளவென அமைந்தது எல்லாம்.

நெல்சனின் தமிழ் வாத்தியார் என்ன சொல்கிறார்? “கிட்டதட்ட பத்து வருஷமா நானும் நெல்சனும் கதை பேசிகிட்டு இருக்கோம். ஏகப்பட்ட கதைகள் பைண்டட் ஸ்கிரிப்டாவே கையில இருக்கு. இந்த கதை அதில் ஒன்று. கல்யாணம்ங்கிறது ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய விஷயம்? அதைதான் இந்த ஒரு நாள் கூத்து சொல்லப் போகுது. எனக்கு தெரிஞ்ச பேமிலி ஒண்ணு இருந்திச்சு. அந்த வீட்ல ஒரு பெண். பெண்ணுன்னு சாதாரணமாக சொல்லிட முடியாது. தேவதைய பார்க்கணும்னு ஆசைப்பட்டவங்க அந்த பெண்ணை பார்த்தா போதும். அழகு, அறிவு, செல்வம் எல்லாம் நிறைஞ்ச அந்த பெண்ணுக்கு பல வருஷங்களா கல்யாணமே ஆகல. ஏன்? அப்படின்னு யோசிச்சு பார்த்துட்டு அந்த பெண்ணோட கதையவே எழுத ஆரம்பிச்சேன். ஒரு அழகான சினிமா கதையா வந்திருச்சு”.

“இந்த கதையில் வர்ற பெண் அப்படியே தேவதை மாதிரி இருக்கணும்னு நான் நினைச்சேன். என்ன ஆச்சர்யம். மியா ஜார்ஜ் கிடைச்சாங்க” என்று வியப்பு மீளாமல் பேசிக் கொண்டே போனார் அந்த தமிழாசிரியர். (டெக்னிஷியன் லிஸ்ட்ல கதை- என்ற இடத்தில் நெல்சன் பெயர்தான் இருக்கு. வேர் இஸ் வாத்தியார் நேம்? சரி விடுங்க… என்ன டெக்னிகல் எரர்ரோ?)

“நான் நிறைய கதைகள் படிப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இலக்கியங்கள் வாசிப்பேன். இந்த படம் திருமணம் என்கிற ஒரு நாள் கூத்துக்காக செய்யுற செலவுகளையும் சடங்குகளையும் பற்றியும் பேசுது. எனக்கு தெரிஞ்சு சுவாரஸ்யமா எடுத்துருக்கேன்னு நினைக்கிறேன். முடிவு மக்கள் கையிலும் ரசிகர்கள் கையிலும்தான் இருக்கு” என்று அடக்கத்தோடு முடித்துக் கொண்டார் நெல்சன். (நூறாவது நாள் விழாவுல சந்திப்போம்னு வாய் கிழிய பேசிய இயக்குனர்களையும் பல விழாக்களில் பார்த்த நமக்கு, நெல்சனும் அவரது அடக்கமும் ஒரு ஷ்யூர் ஹிட்டுக்கான முன்னோட்டமாகவே தெரிந்தது)

அதை உறுதிபடுத்துவது போலவே இருக்கிறது ட்ரெய்லர். காத்திருக்கோம் நெல்சன்!

மியாஜார்ஜ், ரித்விகா, நிவேதா என்று மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூணு பேருக்கும் சேர்த்து ஒரே ஒரு தினேஷ்தான் என்பதுதான் வயிற்றெரிச்சல் நம்பர் ஒன்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actress Shivani Joshi Stills

Close