அவரோட சேர்ந்து இவரும் கெட்டுட்டாரே…?

புதுசாக ஒரு வம்பு! ஆரம்பத்திலேயே இதை தடுத்துவிட்டால் சிக்கலில்லை. சின்ன பசங்கதானே… போகட்டும் என்றால் பிற்பாடு சிக்கல்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இந்த ‘வம்பு’ குறித்து வெளிப்படையாக பேச தயங்கினாலும், பெரிய பெரிய சினிமா கம்பெனிகளில் ‘வளர்ற நேரத்துல இப்படியாகிட்டாரே’ என்பதாகதான் இருக்கிறது அதிர்ச்சி. கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட அந்த இளம் ஹீரோ, பெரும்பாலும் படப்பிடிப்புக்கு கூட அல்வா கொடுத்துவிட்டு வீட்டிலேயே உறங்கி வருகிறார். மாலை ஆறு மணிக்கு விழிக்கும் அவர் இரவு முழுக்க இந்த போதையில் திளைத்து வந்தார். இப்போது திருத்தவே முடியாதளவுக்கு அவரை குடித்துவிட்டது அது.

அவர் எப்படியாவது போகட்டும். தன்னுடன் நெருங்கி பழகும் அந்த ஒல்லியோ ஒல்லி இசையமைப்பாளருக்கும் அந்த பழக்கத்தை கற்றுக் கொடுத்து வருகிறாராம். இப்ப சந்தோஷமா இருக்கிற எல்லாமும் இன்னும் சில காலத்தில் கொடூரமான சிக்கலில் கொண்டு போய்விட்டுவிடும் என்பதை யார் சொல்வது ஒல்லி பிச்சானுக்கு?

களவும் கற்றுமற என்கிறது முன்னோர் வாக்கு. கஞ்சாவையும் குடித்து மற…(ங்க) தம்பி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் சண்டையா?

ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்குமான உறவு முற்றிலும் கட் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது அண்மைகால தகவல்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போகிறார்கள். அதில்...

Close