ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் சண்டையா?
ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்குமான உறவு முற்றிலும் கட் ஆகிவிட்டதோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது அண்மைகால தகவல்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போகிறார்கள். அதில் நடித்த எல்லாரையும் இதிலும் நடிக்க வைக்க வேண்டும் என்கிற விருப்பம் தானாகவே வரும்தானே? வந்ததாம். ஆர்யாவின் சம்மதத்தில்தான் இப்படியொரு முயற்சியே ஆரம்பம் ஆனது. அதனால் அவர் பிரச்சனையில்லை. சந்தானமும் ஓ.கே சொல்லிவிட்டார். நயன்தாராவை கேட்ட போது, ம்ஹூம். ஆர்யான்னா முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.
பொதுவாக சம்பள ஆசை காட்டினால் எந்த பாம்பும் படமெடுப்பதை சுருக்கிக் கொள்ளுமல்லவா? அதற்கும் மசியவில்லை நயன்தாரா. இதில் ஆர்யா உள்ளிட்ட அனைவரும் அப்செட்.
காலம் எப்போதும் ஒரே மாதிரியா இருக்கிறது? ஏ.எல்.விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் ஆர்யா. அதில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று விரும்பினாராம் விஜய். முதலில் அந்த முயற்சியை தடுத்தது ஆர்யாதானாம். வேற யாரை வேணும்னா ஹீரோயினா போடுங்க. நயன்தாரா வேணாம் என்றாராம்.
கோடம்பாக்கத்துல என்னய்யா நடக்குது?