மீண்டும் பாலகிருஷ்ணாவுக்கு கால்ஷீட்! நயன்தாரா முடிவால் முன்னணி ஹீரோக்கள் ஷாக்?

நயன்தாரா போல ஒரு விஷயத்தை மேஜிக் பண்ணுகிறவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் இத்தனை வருட காலம் அவரால் திரையுலகத்தில் நிலைத்து நிற்க முடிகிறது. ஒரே குட்டையில் மட்டையாக ஊர்ந்தால், மட்டையும் அழுகும், குளமும் நாஸ்தி என்கிற விஷயம் தெரிந்தவர். தெலுங்குக்கு திடீர் பிரேக் விட்டுவிட்டு தமிழுக்கு வந்தாரல்லவா? இங்கு அவர் மனசுக்கு ஏற்றார் போல நாலைந்து படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நேரத்தில் அவரை தெலுங்கு படவுலகத்திலிருந்து அழைக்காத பெரிய ஹீரோக்களே இல்லை. எல்லாருக்கும் ‘நான் இப்ப வர முடியாது ப்ளீஸ்’ என்றே கூறிவந்தார் அவர். இந்த பதிலால் படு விரக்திக்குள்ளான அத்தனை பேரும், மழை வேண்டி யாகம் செய்வதை போல நயன்தாரா வேண்டிய யாகம் பண்ணாத குறைதான்.

மறுபடியும் என்ன நினைத்தாரோ? திடீரென தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பிய நயன், வெகு காலம் கழித்து பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். மச்சம்டா என்று மற்றவர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழில் தனது படங்களை குறைத்துக் கொள்ள திட்டமிட்டு வருகிறாராம். இனி பாலகிருஷ்ணா படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்களுடன் மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடிப்பது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் தமிழை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

வழக்கம் போல ஃபீல்டை விட்டு ரெஸ்ட் எடுப்பதற்கு முன் அவரை பற்றிய செய்திகளை வரவழைத்து தனது இருப்பை சொல்லிக் கொண்டேயிருப்பாரல்லவா? அதில் பலிகடா ஆகியிருப்பவர்தான் அந்த புத்தம் புது காதலர் என்றும் கூறுகிறார்கள்.

எது எப்படியோ? மாரியாத்தா போற இடமெல்லாம் மாவிளக்குதான்!

Read previous post:
சகாப்தம் படம் பார்த்தீங்களா? நிருபர் கேள்வியால் வடிவேலு அதிர்ச்சி!

எலியோ, புலியோ, சில நாட்கள் தலை காட்டாமல் திடீரென தலை காட்டினால் களை கட்டும்தானே? வடிவேலுவின் வரவும் அப்படிதான் இருந்தது. மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்ட பிரஸ்மீட்டுக்கு நாலரைக்கு...

Close