சகாப்தம் படம் பார்த்தீங்களா? நிருபர் கேள்வியால் வடிவேலு அதிர்ச்சி!

எலியோ, புலியோ, சில நாட்கள் தலை காட்டாமல் திடீரென தலை காட்டினால் களை கட்டும்தானே? வடிவேலுவின் வரவும் அப்படிதான் இருந்தது. மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்ட பிரஸ்மீட்டுக்கு நாலரைக்கு மணிக்கு அவர் வந்து சேர்ந்தாலும், ஜிகினா பாணியில் மூத்த நிருபர்களை அருகில் சென்று சந்தித்து, ‘அண்ணே… சவுக்கியமா?’ என்றார். ‘கொஞ்சம் லேட்டாயிருச்சு, ஸாரி’ என்றவர், கேப்டன் விஜயகாந்துக்கு எதிரான பிரச்சார கூட்டத்தை போலவே ஏரியாவை பரபரப்பாக்கினார். அதிலும் பிரஸ்மீட் முடிகிற நேரத்தில், ‘அண்ணே… சகாப்தம் படம் பார்த்தீங்களா?’ என்றொரு நிருபர் கேட்க, அந்த ஏரியாவே சிரிப்பொலியால் கிடுகிடுத்தது.

‘ஏண்ணே… என் படத்தையே பார்க்க எனக்கு நேரமில்ல. நான் எங்கேண்ண அதையெல்லாம் பார்க்குறது?’ என்று நல்லபடியாக முடித்து வைத்தார். அதற்கு முன்பாக அவர் பேசியதெல்லாம் அவைக்குறிப்பிலிருந்தும் சபைக்குறிப்பிலிருந்தும் நீக்கப்பட வேண்டிய கடாமுடா கடுங்கோபம்ஸ்…!

அரசியலுக்கு வருவீங்களா? என்றொரு கேள்வி. ‘ஏண்ணே ஒரண்டைய இழுக்கிறீங்க?’ என்று அந்த கேள்வியை ரசித்தபடியே பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘அதுக்கு நான் இப்பவே எப்படி பதில் சொல்ல முடியும்? அந்த நேரத்துல தேவைப்பட்டா வருவேன். நல்லா கொட்டை எழுத்துல போட்டுக்கங்க..’ என்று கூற, மேடையில் அமர்ந்திருந்த தயாரிப்பாளருக்கு உடலெல்லாம் நடுங்காத குறை. நல்லவேளை… பேச்சு அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘எலி’ பற்றியும் வந்தது. நிறைய கேள்விகள். நிறைய பதில்கள். அதில் உருப்படியாக எழுதுவதற்கேற்ற விஷயம் இதுதான்.

ஆராதனா படத்தில ராஜேஷ்கன்னா பாடுற மேரே ஹப்பு நக் என்ற பாடல் எனக்கு ரொம்ப புடிக்கும். இந்த படத்தில் சதாவோட டூயட் பாடணும்னு முடிவு எடுத்தப்போ, இந்த பாடலை யூஸ் பண்ணிக்கலாம்னு தோணுச்சு. உடனே தயாரிப்பாளர்ட்ட சொல்லி முறைப்படி ரைட்ஸ் வாங்க சொல்லிட்டேன். பெரிய பணம் கொடுத்து அந்த ரைட்ஸ் வாங்குனாங்க. படத்துல ரேடியோ பாடிக்கிட்டேயிருக்கும். அதுல இந்த பாட்டு வரும். அப்படியே நான் ரேடியோ பொட்டிக்குள்ள போயிருவேன். அப்படியே மூணாறுல ஆடிட்டு மறுபடியும் ரேடியோ வழியா வெளியே வந்துருவேன் என்றார்.

வடிவேலுவின் மூக்கு மேல் மிளகாயை பொசுக்கிய கேள்வி ஒன்றும் இருந்தது அங்கே. உங்க கூட நடிக்கறதுக்கு கதாநாயகிகள் கால்ஷீட் கொடுக்காததால்தான் சதாவை அழைச்சிட்டு வந்தீங்களா? படக்கென்று விஜயகாந்த் ஆகிவிட்டார் வடிவேலு. சேரை தூக்கி அடிப்பேன் என்றுதான் சொல்லவில்லை. இதெல்லாம் ஒரு கேள்வியாங்க. இவ இல்லேன்னா இன்னொருத்தி. அவளும் இல்லைன்னா வேறொருத்தி. பணத்தை விட்டெரிஞ்சா வந்துட்டு போறாளுக என்று ஏக வசனத்தில் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டார்.

ஆமாம்… நடிகர் சங்கம் இப்படியெல்லாம் அநாகரீகமா, ஒருமையில பேசக் கூடாதுன்னு வடிவேலுவை எச்சரிக்குமா? அல்லது விஜயகாந்தையே எதிர்த்த ஆளு. நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிடுமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருட்டுக்கல்யாணத்துக்காக சிம்பு  – ஆன்ட்ரியா பாடிய பாட்டு

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் “  திருட்டுக்கல்யாணம் “   கதாநாயகனாக ரங்காயாழி...

Close