நயன்தாரா முயற்சி வீணாப் போச்சா?
சராசரி பெண்ணாக இருந்திருந்தால், அவருக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று சமையல் கட்டில் புகுந்து சாம்ராஜ்யம் நடத்தியிருப்பார். நயன்தாரா வேற பெண்ணாச்சே? தன் காதலர் விக்னேஷ் சிவனுக்காக புதுப் புது புராஜக்டுகளை அமைத்துக் கொடுப்பதில்தான் அவர் கவனம் முழுக்க இருந்தது. இப்பவும் இருக்கிறது. விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா காம்பினேஷனில் உருவாகும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப் போகிறார். அது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, நடுவில் சிவகார்த்திகேயன் சிக்கினால் வளைத்துவிடுவது என்று அவர் எடுத்த முயற்சியில் அரை கிணறு தாண்டியாச்சு. அதற்கப்புறமான ரிசல்ட்தான் ஐயோ குய்யோ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் அல்லவா? அதில் தனக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டு நயனுக்கு போன் அடித்தாராம் சிவா. அப்போது, “எனக்கு மோகன் ராஜா படத்துல நடிக்கறதுல விருப்பம் இல்ல. உங்களுக்கு நான் வேணும்னா நானே ஒரு ஸ்கெட்ச் போடுறேன். நீங்க எஸ் சொன்னா போதும்” என்றாராம். அதன்படி உருவானதுதான் விக்னேஷன் சிவன் இயக்க, அதில் சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிற திட்டம்.
இந்த படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கும்படி ஏற்பாடு செய்து வந்தார் நயன்தாரா. (அஜீத் கைவிட்டதும், நயன்தாரா ஆதரவு கொடுக்கிறாரோ?) எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்த நேரத்தில் பொல்லாத பூனை ஏதோ குறுக்கே போயிருக்க வேண்டும். இப்போது சிவகார்த்திகேயன் நழுவிக் கொண்டுவிட்டாராம். இந்த நழுவலை சரி செய்ய முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
வந்தா வரவு. வரலேன்னா பெருத்த நஷ்டம்! என்ன செய்யப் போகிறாரோ பேரழகி?