அடுத்தது சிம்பு ஹன்சிகா திருமணம்தான் கூட்டத்தில் போட்டு உடைத்த ஹீரோயின்

மீண்டும் ஒரு விஜய் அவார்ட்ஸ் நியூஸ். இது நைந்து போன காதலுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்குமா தெரியாது. பட்… ஏதேதோ சந்தேகங்களை கிளப்பிவிட்டிருப்பது மட்டும் நிஜம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லா நடிகர் நடிகைகளிடமும் மைக்கை நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார் டி.டி. அப்படியே அவர் கண்ணில் ப்ரியா ஆனந்த் பட, படபடவென கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான கேள்வி இது.

‘விஜய் அமலாபால் கல்யாணம் முடிஞ்சாச்சு. கோடம்பாக்கத்துல அடுத்த பரபரப்பான லவ் மேரேஜ் எது? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க…’ என்று கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் படக்கென பதில் சொன்னார் ப்ரியா ஆனந்த். இந்த பதில் அங்கிருந்த அத்தனை பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும். அதிலொன்றும் சந்தேகமில்லை. இத்தனைக்கும் ப்ரியா ஆனந்தின் அருகிலேயே இருந்தது இந்த கேள்விக்கும் பதிலுக்குமான சப்ஜெக்ட்! (ஹன்சிகா மோத்வானி)

‘அடுத்த லவ் மேரேஜா? சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும்தான் ’ என்றார் ப்ரியா ஆனந்த். இந்த பதிலை கேட்டு நியாயமாக கோபப்பட வேண்டிய ஹன்சிகா, கண்கள் விரிய அதற்குள் ஒரு காதல் தெரிய, லேசான புன்னகையோடு இதை ரசித்தார். அதுதான் கொடுமை. (என்னங்கடா நடக்குது நிஜத்துல? )

ஒருவேளை சிம்புவும் ஹன்சிகாவும் அம்மாவுக்கு போக்கு காட்டுறாங்களோ என்னவோ? ஓட்றதுக்கு முன்னால ஊடகங்களுக்கு மட்டும் சொல்லிட்டு ஓடுங்க ஜோடீஸ்…!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ இனி ஃபேஸ்புக் திருமணங்கள் நடக்கும் ’ கவிப்பேரரசு வைரமுத்து ஆருடம்!

ஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும்...

Close