2015 வரைக்கும் இல்லவே இல்ல… இது அனுஷ்கா அப்டேட்!
ஐம்பது கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு செலவு செய்ய இறங்குகிறார்கள் என்றால், அது ஹீரோவை மையப்படுத்திய கதையாகதான் இருக்கும். இந்த விதியை ஜஸ்ட் லைக் தட் உடைத்து தள்ளியிருக்கிறார் அனுஷ்கா. அவர் தற்போது தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கு பாகுபாலி படத்தின் பட்ஜெட், எண்பது அல்லது 100 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
கிராபிக்ஸ், செட், ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் கூட்டம் என்று பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே. இந்த படத்தை முடித்து வெற்றிச் செய்தியை கேட்ட பின்தான் கல்யாணம் என்கிற முடிவில் இருக்கிறாராம் அனுஷ்கா. (அப்ப 2015 வரைக்கும் மேள சப்தம் இல்ல..) இத்தனை பிரமாண்டமான படத்திற்கு அனுஷ்காவும் படத்தின் இயகுனருமான ராஜமவுலியின் வேல்யூமே கூட போதுமானதுதான். ஆனால் அதுவும் போதாது என்று இப்போது தமன்னாவையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார் ராஜமவுலி.
படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அறுபது லட்சத்திற்கு குறையாமல் சம்பளத்தை அள்ளி வழங்கியிருக்கிறார்களாம். அரண்மனை கட்றதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதுல செங்கல்லை எண்ணி என்ன ஆகப் போகுது? அள்ளி விடுங்க அள்வி விடுங்க…