செம்பரம்பாக்கம் உடைஞ்சாலும்…! பார்த்திபனின் நம்பிக்கை ப்ளஸ் நையாண்டி பீப்!
ஊரெல்லாம் மண்டையிலிருந்து சிந்தித்தால் பார்த்திபன், மூக்கிலிருந்தும், நகத்திலிருந்தும் கூட சிந்திப்பார். ஏனென்றால் டிசைன் அப்படி! உலகம் புதுமைப்பித்தன் என்ற அடையாளம் கொடுத்து அவரை அழைப்பதாலேயோ என்னவோ, எல்லாவற்றிலும் ஒரு நையாண்டி நக்கல்! சோகத்துல கிடந்து சோம்பல் முறிக்காம, எந்திரிச்சு வாடா என்பது போல ஒரு பாடலை அவர் உருவாக்கி அதை இசை ஆல்பமாகவே வெளியிட்டிருக்கிறார். இந்த வெள்ளம் குறித்தும் அதன் வேகம் குறித்தும்தான் இந்த பாடல். யு ட்யூபில் வெளியிட்டு ஏழே மணிநேரத்தில் எட்டு லட்சம் ஹிட் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்க்க, நிஜமாகவே கவுண்ட் ஏறிக் கொண்டிருக்கிறது பார்த்திபனின் யு ட்யூப் கணக்கில்.
வழக்கம் போலவே நாட்டில் எந்த விஷயம் பற்றிக் கொண்டு எரியுதோ, அந்த விஷயத்தையே இந்த பாடலுக்கு தலைப்பாக கொடுத்திருக்கிறார் பார்த்திபன். விஜயகாந்தின் தூ…தானே இப்போது ட்ரென்ட்? இவரது பாடலுக்கும் இதுதான் தலைப்பு.
‘த்துதா
மகித
லகுதா ‘
புரிஞ்சவங்களுக்கு புரியட்டும்… புரியாதவங்களுக்கு எரியட்டும்! இதோ அந்த தூ பாடல்-