கடைசியில இப்படி சொல்லிட்டாரே? விஜய்யால் பார்த்திபன் ஷாக்!
ஒரு காலத்தில் புதுமைப்பித்தனாக இருந்த பார்த்திபன், அந்த வேஷத்தை மெயின்ட்டெயின் பண்ணுகிறேன் பேர்வழி என்று அடிக்கிற கூத்துகள், அண் சகிக்கபுள்! ஊரில் எந்த விஷயம் நடந்தாலும், புதுமை என்ற பெயரில் அவர் உளறித் தள்ளுவதை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்க ஆரம்பித்துவிட்டான் ரசிகன். இருந்தாலும் அவர் தன் ‘கெத்தை’ விட்டபாடில்லை.
இவ்வளவு களேபரத்திற்கு நடுவிலும் அவர் இயக்கிய கதை திரைக்கதை இயக்கம் என்ற படம் நிஜமாகவே வித்தியாசத்தை தர, கை நிறைய கலெக்ஷன். அவருக்குள் உறங்கிக் கிடந்த டைரக்டர் அதற்கப்புறம் விழித்துக் கொண்டதில் கோடம்பாக்கத்தில் பாதி ஹீரோக்களுக்கு தூக்கம் போச்சு! விஜய், விஷால், விக்ரம் என்று கண்டமேனிக்கு போன் போட்டு, கதை ஒண்ணு இருக்கு. கேட்கிறீங்களா? என்று தொந்தரவு செய்ததில், பாதி பேர் பார்த்திபன் என்றாலே பேந்த பேந்த விழிக்க ஆரம்பித்தார்கள்.
ஆனாலும் நம்பிக்கையோடு அழைத்து கதை கேட்டாராம் விஜய். இன்றைய தேதியில் விஜய் எடுக்கிற ரிஸ்குகளை வேறு எந்த பெரிய ஹீரோக்களும் எடுப்பதில்லை. ஜெயிக்கிற குதிரை மீது பந்தயம் கட்டுகிறவர்களுக்கு மத்தியில் விஜய் மட்டும்தான் புது இயக்குனர்களை கூட நம்பி வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதனால் பார்த்திபனை அழைத்து விஜய் கதை கேட்டதிலும் வியப்பில்லை.
கடைசியில் என்னதான் ஆச்சு? முழு கதையையும் கேட்ட விஜய்யிடமிருந்து குட்… வெரி குட்… இத இததான் எதிர்பார்த்தேன் என்ற வார்த்தைக்காக பார்த்திபன் காத்திருக்க, விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘என்ன சார் கதை இது. எனக்கு ஒண்ணுமே புரியல…?” என்ற திராவக வார்த்தைகள்தான்!
“கரெக்டா சொன்னீங்க… எனக்கும் கூட புரியல” என்று கூட சொல்லிவிட்டு எழுந்து வந்திருப்பார் பார்த்திபன். யார் கண்டது அதையெல்லாம்!
To listen the audio clcik below :-