ஒரே வருடத்தில் மூன்று ரஜினி படங்கள்! படு பீதியில் மற்ற படங்கள்!

ரஜினி படம் எப்போதெல்லாம் வருகிறதா, அப்போதெல்லாம் யானை புகுந்த பானை கடை போலாகிவிடும் மார்க்கெட். ரசிகர்கள் கையில் இருந்த மொத்த பணமும் ரஜினி படத்திலேயே கரைந்துவிடும். அதற்கப்புறம் வருகிற படங்களுக்கெல்லாம் ஆயுட்கால அவஸ்தைதான் மிச்சம். கபாலி டிக்கெட் ஆயிரம் ரெண்டாயிரம் போன கதையெல்லாம் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய சங்கடங்கள்.

கட்… இந்த வருடம் எப்படி? ஏப்ரல் 27 ல் காலா. தீபாவளிக்கு 2 .0. பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் படம். இப்படி பத்து மாத காலத்திற்குள் மூன்று ரஜினி படங்கள் வந்தால், தியேட்டர்கள் செழிக்கும். விநியோகஸ்தர்கள் பிழைப்பார்கள். நடுநடுவே கமல் படங்கள், அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள் என்று வரிசை கட்டி வந்து நின்றால், மிச்ச சொச்ச பணப்புழக்கமும் அங்கே தேங்கும்.

பட்ஜெட்டில் துண்டு விழுந்த பரிதாபத்திற்கு ஆளாகும் திருவாளர் பொதுஜனம், மற்ற மற்ற படங்களுக்கு சில்லறையை போடக் கூட மனம் வைக்க மாட்டார்கள் என்பதுதான் பொதுவான கணக்கு.

இப்ப சொல்லுங்க… ரெண்டாம் கட்ட நடிகர்களை நம்பி பணம் போட்டவர்களின் கதி?

1 Comment
  1. தமிழரசன் says

    ஒரு குழப்பமும் இல்லை. உன்னை போல குள்ளநரிகள் கூட்டத்தை ஒழிக்க இதோ எங்கள் கலியுக தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புறப்பட்டு விட்டார்.
    தலைவா ஆணையிடுங்கள்.
    காலா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த வெற்றி வைர மகுடம் என்றால் அது மிகை இல்லை.
    தலைவர் ரஜினி அவர்களின் காலா மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அருண் விஜய்யை அம்போவென்று விட்ட கவுதம்மேனன்!

Close