விட்டா விமானத்திலேயே ஷோ போடுவாங்க? படம் எடுக்க வந்த பைலட்டுகள்!

நல்ல சினிமாவோ, கெட்ட சினிமாவோ, கேடுகெட்ட சினிமாவோ, எல்லாவற்றுக்கும் இங்கே கதை விவாதம் முக்கியம். அங்கே எந்நேரமும் குடிப்பார்கள். எப்போதாவது கதை பேசுவார்கள் என்றெல்லாம் அவரவர் உருவாக்குகிற சினிமாவின் இன்ஃபேன்ட் காலத்தை வர்ணிப்பார்கள் இதே சினிமாக்காரர்கள். எப்படியோ முட்டி மோதி ஒரு கதையாக உருவெடுக்கும் அதை, இயக்குர் கருவெடுப்பாரோ, காய்ச்சி காய்ச்சி ஊற்றுவாரோ? படம் தயாராகிவிடும். டைரக்டர் மட்டும் தனியே உட்கார்ந்து தானே எழுதிய கதைகளுக்கும் கூட இதே நிலைமை வரும். நிறுத்தி நிதானமாக ஆராய்ந்து அடியெடுத்து தொழில் பக்தியோடு படம் இயக்க வருகிறவர்களும் இங்கே உண்டு.

வெற்றி கொஞ்சமும், தோல்வி எக்கச்சக்கமாகவும் இருக்கிற இந்த தமிழ்சினிமா இப்போது வேடிக்கையான விபரீதமான ஆச்சர்யமான படைப்பாளிகளையும் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல் ஸ்டெப்தான் ‘ர’. (மிச்ச எழுத்தை விட்டுட்டதா அர்த்தமில்லே. தலைப்பே ‘ர ’ தான்) அப்படியென்றால் பறிமுதல் என்று அர்த்தமாம். சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் இப்போதே இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு வீடியோ கேம் உருவாக்கியிருக்கிறார்கள். அது இந்த படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குனர் பிரபு யுவராஜ். இவரும் படத்தின் தயாரிப்பாளர் அஷ்ரப்பும் விமான பைலட்டுகள்.

பறந்துகிட்டு இருக்கும்போதே இந்த கதையை அஷ்ரப்புக்கிட்ட சொன்னேன். அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. விமானம் தரையை விட்டு இறங்கியதும், இந்த கதையை படமா எடுக்கறதா முடிவு பண்ணிட்டோம். நாங்க ரெண்டு பேர் மட்டுமல்ல, படத்தின் ஹீரோவும் கூட பைலட்தான் என்றார் பிரபு.

அஷ்ரப், அதிதி செங்கப்பா, லாரன்ஸ், ஜெயபிரகாஷ், ரவி பிரகாசம், ஜெயந்த், கீதா பாபு, ரித்திகா, யுவினா மற்றும் பல புதுமுகங்களும் நடிச்சிருக்காங்க. ஆர்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய.. ராஜ் ஆர்யன் இசையமைச்சிருக்காரு. லாரன்ஸ் பாடல்களை எழுதியிருக்கார். படத்துல ஒரேயொரு பாடல்தானாம். முக்கியமான பைட் ஒன்றை திலிப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். 16 ம் நுற்றாண்டு, 19 ம் நுற்றாண்டு, 20 ம் நுற்றாண்டு ஆகிய மூன்று கால கட்டத்தையும் கிராபிக்ஸ் உதவியுடன் தத்ரூபமாக சித்தரித்திருக்கிறார்களாம்.

கதை பற்றி அதிகம் வெளியே சொல்லிக் கொள்ள பிரியப்படாத இயக்குனர் பிரபு, ஒரு விஷயத்தை மட்டும் சொன்னார். சார்… இந்த படத்தின் ஆடியோ ரிலீசை ஃபிளைட்லேயே பண்றதா இருக்கோம். புதுசா இருக்குல்ல? என்றார்.

விட்டால் விமானத்துலேயே ஷோ போடுவாங்க போல…. நாட்டி பாய்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சூர்யாவானார் விஷால் குழப்பியடித்த ஸ்ருதிஹாசன்

கொஞ்ச காலமாகவே ‘எடுப்பாகவே’ திரிகிறார் ஸ்ருதிஹாசன். ஆந்திராவுக்கு ஒரு நீதி, அப்பாவி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? என்று அவரது ரசிகர்கள் சாலை மறியல் செய்வதற்குள் சுதாரித்துக் கொண்ட...

Close