வியாழன்று சென்னை திரும்பும் அனிருத்! விமான நிலையத்தில் மடக்கக் காத்திருக்கும் போலீஸ்?

சிம்பு தலைமறைவாகி சரியாக இரண்டு ராத்திரியும் மூன்று பகலும் ஓடி விட்டன. நிலைமை சீரியஸ் என்பதை உணர்ந்த நிமிடத்திலிருந்தே அவரை காணவில்லை. ஒருபுறம் கோவை போலீஸ் மூலம் சம்மன் வந்தாலும், வேறு வேறு மாவட்டங்களில் அவர் மீதும் அனிருத் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளதால், போலீசும் தன் சாதுர்யமான விரட்டலை துவங்கிவிட்டது. இருவரில் யார் சிக்கினாலும் களிதான்!

இதற்கிடையில் கனடாவிலிருந்து கிளம்பும் அனிருத் வியாழன் காலை சென்னை வந்து சேர்கிறார். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ், அனிருத்தின் வருகைக்காக காத்திருக்கிறதாம். இங்கிருந்தபடியே எல்லா விஷயங்களையும் அறிந்து வரும் அனிருத், தனது பயணத்திட்டத்தை மாற்றி வழியிலேயே வேறு ஏதாவது ஒரு நகரத்தில் இறங்கி, முன் ஜாமீன் பெற்றபின் வருவாரா? அல்லது ஆழம் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்வாரா? என்பதை வியாழன் வரைக்கும் காத்திருந்தால் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையில் இருவருக்குமான எதிர்ப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் சிம்பு அனிருத்தை உள்ளே தள்ளாமல் ஓயக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதனால், பெரிய இடத்து பிள்ளைகள் என்பதையும் மறந்து போலீஸ் நியாயத்தை கையில் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Anjala – Tea Podu Video | Vimal, Nandhita | Gopi Sundar

Close