பிரபுதேவா அழைப்பு விஜய் சேதுபதி யெஸ்!
வடக்கே வெற்றி இயக்குனராக திரிந்து கொண்டிருந்தாலும், பிரபுதேவாவின் கண்கள் தமிழ்நாட்டிலும் நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு உதாரணம்தான் பின்வரும் மேட்டர். பாலிவுட்டில் கோடி கோடியாக கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் அவருக்கு, தமிழில் படம் தயாரிக்க வேண்டும் என்பது ஆசை. அதை நிறைவேற்ற வேண்டும் நினைத்த வினாடியில் அவர் மனசுக்குள் வந்தவர் விஜய் சேதுபதிதானாம். உடனே அவருக்கு போன் போட்டுவிட்டார். பிரபுதேவா கேட்டுவிட்டாரே என்பதற்காக இந்த படத்தில் நடிக்கவும் சம்மதித்துவிட்டார் விஜய் சேதுபதி. இருந்தாலும் சின்ன மனக்குறையோடு…
என்னாச்சு?
வன்மம் படத்தின் தோல்விக்கு பிறகு இனி டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தார் அவர். ஆனால் பிரபுதேவா தயாரிக்கும் படத்தில் ஜெயம் ரவியும் ஒரு ஹீரோ. இந்த படத்தை இயக்கவிருப்பது சமீபத்தில் ஹிட்டடித்த ரோமியோ ஜுலியட் பட இயக்குனர் லட்சுமண். அவர் பிரபுதேவாவுக்கு கதை சொல்லும்போதே இந்த படத்தில் அந்த இன்னொரு கேரக்டருக்கு விஜய் சேதுபதி இருந்தா நல்லாயிருக்கும் என்றாராம். அதற்கப்புறம்தான் பிரபுதேவா விஜய் சேதுபதிக்கு போன் அடித்து…. அவர் அதில் நடிப்பதாக ஒப்புக் கொண்டு…
ஓ.கே. ஸ்டார்ட் மியூசிக்!