உங்க படத்தில் நான் நடிக்கிறேன்! ரஜினி போன்! இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்!

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார். காலா படத்திற்கு பின் ரஜினி நடிப்பாரா? அரசியலில் கவனம் செலுத்துவாரா? இந்த டவுட்டுக்குள் அகப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. நாம் சொல்லப் போகும் இந்த எக்ஸ்க்ளூசிவ் தகவலால் உங்கள் எண்ணத்தில் இனிப்பு சேர்வது நிச்சயம்.

ஆண்டவன் கட்டளை படத்திற்குப் பின், கமர்ஷியல் சினிமா மீது கடும் எரிச்சலில் இருந்த காக்கா முட்டை மணிகண்டன், நான் சினிமாவை விட்டே விலகப்போகிறேன் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து வந்தார். கட்… ஆண்டவன் கட்டளை படத்திற்கு முன்பே அவர் கமிட் ஆன ‘கடைசி விவசாயி’ படமும் கிட்டதட்ட கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இந்த நிலையில்தான் கடைசி விவசாயி படத்தின் கதையை பற்றி எப்படியோ அறிந்தாராம் ரஜினி. இவ்வளவு அற்புதமான கதை ஏன் நிற்கணும் என்று ஷாக்கானவர், சம்பந்தப்பட்ட மணி கண்டனுக்கே போன் அடித்துவிட்டார். முழு விபரத்தையும் கேட்டவர், “இந்தப் படத்தில் நான் நடிக்க தயாரா இருக்கேன் ” என்று கூற… பூமி நழுவிக் காலில் விழாத குறையாக விட்டது மணிகண்டனுக்கு.

பரபரவென வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ரஜினியின் அரசியல் முன்னேற்றத்திற்கு பெரிதும் கை கொடுக்கப் போகும் படமாக ‘கடைசி விவசாயி’ இருக்கக் கூடும்.

முன் வைக்கிற காலை பின் வைக்கிற பழக்கம் ரஜினிக்கு இருக்கலாம். அல்லது இல்லாமலிருக்கலாம்.

கடைசி விவசாயி என்ற தலைப்புக்காகவாவது இப்போது முன் வைத்த காலை பின் வைக்காதீங்க ரஜினி சார்…!

1 Comment
  1. Arun says

    Thalivar Rajini will become the next Chief Minister of TamilNadu

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Gulaebaghavali Official Trailer

https://www.youtube.com/watch?v=5oIFBRnHwEo

Close