ரஜினி ஹீரோ, கமல் வில்லன்?! லைட்டா இல்லங்க… ஸ்டிராங்கா வரும் லைக்கா?
நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்… ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கும் ஒரு படத்தை டிசைன் செய்து கொண்டிருக்கிறார்கள் லைக்காவுக்காக! முயற்சிஆரம்ப கட்டத்திலிருந்தாலும், அதிகாரபூர்வ மூவ் நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். பட்ஜெட்? கேட்டால், தலை கிறுகிறுத்து ஒரு சோடா குடித்துவிட்டு வந்துதான் மிச்சத்தையும் படிப்பீர்கள்.
ரஜினி சுமார் ஐம்பது கோடி சம்பளம் வாங்குகிறார். கமல் வில்லனாக நடிக்கிறார் என்றால் அவரும் ஐம்பது கேட்க மாட்டாரா என்ன? முதலில் ‘நான் வில்லனா நடிக்கறதா?’ என்று ஒதுங்கியவர், அதற்கப்புறம் இறங்கி வந்திருப்பதாக கேள்வி. ஷங்கர் சம்பளம், ஏ.ஆர்.ரஹ்மான் சம்பளம், படத்தின் கதாநாயகியை இந்நேரம் ஜெய்யாலுக்காஸ், அல்லது லலிதா ஜ்வல்லரியில் கொடுத்து நெய்து கொண்டிருப்பார்கள். அவர் சம்பளம்? இப்படி ஆர்ட்டிஸ்ட்டுகள், டெக்னீஷியன்கள் சம்பளமே 100 கோடிக்கும் மேல் தாண்டும் என்கிறார்கள்.
இந்த முறை தங்கள் நிறுவனத்தின் மீது உலகத்தின் கவனத்தை உருப்படியாக திருப்பிவிடுவது என்ற நோக்கத்திலிருக்கிறது லைக்கா. தும்முறவங்கள்லாம் கொஞ்சம் முன்னாடியே தும்மிக்கலாம்!
LONG LIVE OUR GOD SUPER STAR STYLE KING RAJINI