மோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி!

கண்ண பரமாத்மா… காசி விஸ்வநாதா என்றெல்லாம் ரசிகர்கள் பரிபூரணமாக கொண்டாடினாலும், அரசியல்வாதிகளின் கணக்கு அதற்கெல்லாம் மேலானது. இந்த சூட்சுமம் அறியாதவரா ரஜினி? அதனாலேயே ஒரு அரசு சார்ந்த சந்திப்பை அப்படி அப்படியே தவிர்த்துவிட்டு மலேசியாவை விட்டு கிளம்பவிருப்பதாக தகவல் கசிகிறது. அது தொடர்பான விரிவான சுவாரஸ்யம் இதோ-

கடந்த சில வாரங்களாகவே ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. ரஜினி போய் இறங்கியதிலிருந்தே மாய பூமியாகிவிட்டது மலேசியா. திரும்புகிற இடமெல்லாம் ரஜினி பற்றியே டாக்க்க்க்க்! மலேசியா ரசிகர்களின் சந்தோஷத்திற்கு தற்போது வெளியாகியிருக்கும் தகவல் நிச்சயம் ஸ்டாப் மார்க்தான்! எதிர்வரும் 22 ந் தேதி அங்கு வருகிறாராம் இந்திய பிரதமர் மோடி. மூன்று நாட்கள் தங்கவிருக்கும் அவர், ரஜினியை சந்திப்பார் என்று முதலில் ஹேஷ்யம் செய்தன அங்குள்ள பத்திரிகைகள். ஆனால் பிரதமர் அங்கு வரும்போது அவரை சந்திப்பதும் அவரோடு ஒரே மேடையில் இருப்பதும் ஒருவகையில் டார்ச்சர் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி.

அந்த மேடைக்கு ரஜினி வந்துவிட்டாலே, ஃபோக்கஸ் இவர் மீதுதான் இருக்கும். இது பிரதமருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். அதனால் எதற்கு அங்கு இருப்பானேன்? “உடனடியாக பாங்காக் ஷெட்யூலை தயார் செய்யுங்கள்” என்று கூறிவிட்டாராம். புரோகிராமில் இந்த பயணம் இப்போதைக்கு இல்லவே இல்லை. அவரது திடீர் முடிவுக்கு மோடிதான் காரணம் என்பதை நன்றாகவே உணர்ந்த படக்குழுவும், பரபரவென வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறது, நாளைக்கே பாங்காக் கிளம்புகிறது ரஜினி உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு. அங்கு இரண்டே நாட்கள் மட்டும் படப்பிடிப்பை நடத்திவிட்டு அங்கிருந்து தாய்லாந்தின் வேறு பல இடங்களுக்கு செல்கிறார்களாம்.

போகிற இடத்தில் தனக்கு ஓட்டல் வேண்டாம். தனி வீடாக இருக்குமா பாருங்கள் என்றும் ரஜினி கேட்டதாக தகவல்! இல்லேன்னா சொல்லப்போவுது பாங்காக்!

2 Comments
  1. SARATH says

    LONG LIVE OUR BELOVED DEMI GOD SUPER STAR RAJINI

  2. shakthi.k says

    pavampa superstar

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Neha Priya Pink Saree Stills

Close