யானும் தீயவன்… கெட்டவன் இமேஜோடு ரீ என்ட்ரியாகிறார் பிரபுதேவாவின் ப்ரோ!

கெட்டவன், மொட்ட சிவா என்று சினிமா டைட்டில்கள் ஒரு புறம் கத்தியை தீட்டிக் கொண்டிருக்க, பல காலம் ஓய்வில் இருந்த ராஜு சுந்தரமும் அப்படியொரு கெட்ட இமேஜோடு நடிக்க வந்திருக்கிறார். ஏற்கனவே பல படங்களில் தலையை காட்டியும், பரபர கால்களை ஆட்டியும் நடித்து வந்த ராஜு சுந்தரம் ஒன் டூ த்ரி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இவர் யாரென்றே தற்போதிருக்கும் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலிருக்கலாம். எனவே அவரை பற்றி சின்னஞ்சிறு குறிப்பு- அவர் பிரபல நடிகரும், இயக்குனரும் நயன்தாரா புகழ் காதலருமான பிரபுதேவாவின் சகோதாரர். இவர்களது அப்பா சுந்தரம் மாஸ்டர், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டிப்படைத்த நடன இயக்குனர். போதுமா முன் குறிப்பு?

அப்படியே இன்னொரு முன்கோப குறிப்பு…! இந்த ராஜு சுந்தரம் ஒரு காலத்தில் நடிகை சிம்ரனை தீவிரமாக காதலித்தவர். சரி… நிகழ் காலத்திற்கு வருவோம். இந்த ராஜு சுந்தரம் இப்போது வில்லனாக அறிமுகமாகப் போகிறார். ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில்தான் இந்த அதிரடி என்ட்ரி. படத்தின் பெயர் யானும் தீயவன்.

ராஜுசுந்தரம் இப்போதும் கூட பல முன்னணி ஹீரோக்களை ஆட்டி வைக்கும் நடன இயக்குனர். மும்பையில் தயாராகும் பாலிவுட் படங்களில் முக்கிய நடன இயக்குனராக இருக்கிறார். அவர் ஏன் ஒரு அறிமுக இயக்குனரின் படத்தில் ரீ என்ட்ரியாக வேண்டும்? நினைத்தால் பெரிய பெரிய இயக்குனர்களே அந்த வேலையை இவருக்காக செய்திருப்பார்களே?

வேறொன்றுமில்லை. இந்த படத்தின் கதை அப்படி ஈர்த்துவிட்டதாம் ராஜு சுந்தரத்தை. ம்… அப்படி வாங்க. இனிமே கதைதாண்டி எல்லாருக்கும் ஹீரோ!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அந்த விஷயத்துல அஜீத்தும் ஆர்யாவும் ஒண்ணு?

வேறென்ன... ரேஸ்தான்! ஒருகாலத்தில் அஜீத் பைக் ரேஸ் மீது வெறி பிடித்துக் கிடந்தார். தனது படத்தின் ஷுட்டிங்கையெல்லாம் கூட விட்டுவிட்டு ரேஸ் பைத்தியமாக அவர் திரிந்ததை சற்று...

Close