‘என்ன சார் இப்படியெல்லாம் கேட்கிறீங்க? வெட்கப்பட்ட நடிகை
ஒரு நடிகைக்கு வாக்கு குளறலாம். நாக்கு குளறலாமோ? தெரியாமல் சிக்கிக் கொண்டார் ரூபா மஞ்சரி. ‘என்ன சார் இப்படியெல்லாம் கேட்கிறீங்க? என்று அவர் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துயரப்பட்டு துக்கப்பட்டு நின்ற சம்பவம்தான் இது. ‘யாமிருக்க பயமே’ என்றொரு படம் தயாராகி வருகிறது. பேய் பிசாசு பில்லி சூனியப் படம் போல தோற்றமளித்தாலும், டைரக்டர் இந்த கதையை வேறு மாதிரி சொல்லியிருப்பார் என்கிற நம்பிக்கையை தந்தது ட்ரெய்லர். படத்தை இயக்கியிருப்பவர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீக்கே. அதாவது டி.கார்த்திகேயன்.
ஒரு பங்களா, அதற்குள் நுழையும் நான்கு நண்பர்கள், அங்கு என்ன நடக்கிறது என்கிற மாதிரி அமைக்கப்பட்டிருந்தது ட்ரெய்லர். இது மாதிரி தமிழ்ல ஏகப்பட்ட படங்கள் வந்துருச்சே, அந்த வரிசையில நீங்களும் ஒரு படம் எடுக்கணுமா? கே.வி.ஆனந்த் இதைதான் கற்றுக் கொடுத்தாரா உங்களுக்கு என்று அட்வைஸ் தந்த நிருபர்களிடம், அவர்களை விட தெளிவாக பேசினார் டீக்கே.
இந்த மாதிரி உலகம் முழுக்க ஆயிரம் படத்திற்கு மேல வந்திருக்கு. ஆனால் நான் அதுல என்ன புதுசா இன்ட்ரஸ்ட்டிங்கா பண்ணியிருக்கேன்ங்கறதுதான் விஷயம். இது முழுக்க முழக்க என்டர்டெயின்மென்ட் த்ரில்லர். கிருஷ்ணா ஹீரோவாகவும், சூதுகவ்வும் கருணாகரன் முக்கிய ரோலிலும் நடிச்சிருக்காங்க. ரூபா மஞ்சரி, ஓவியா, ரெண்டு பேரும் ஹீரோயினா நடிச்சிருக்காங்க கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனும் ஹீரோவா நடிச்சிருக்கார் என்றார்.
ஆமா… அந்த நாக்கு குளறிய மேட்டரை சொல்லவே இல்லையே? ரூபா பேசும்போது இந்த படம் ரிலீசுக்கு பிறகு டைரக்டர் டீக்கேவை கையாலயே பிடிக்க முடியாது என்றார். கையால பிடிக்க முடியாதுன்னு சொன்னீங்களே, அதுக்கு என்னா அர்த்தம் என்று ஒரு குசும்புக்கார நிருபர் கேட்டு வைக்க, முகமெல்லாம் வெட்கம் பிடுங்கி தின்க பதில் சொன்னார் ரூபா மஞ்சரி. அதுதான் நீங்கள் முதல் பாராவில் படித்தது…
அழகு புள்ளைங்கள அழ வைக்கறதே வேடிக்கையா போச்சு!