சிக்கலில் சந்தனத்தேவன்! ஆர்யா கையிருப்பு அவுட்?
சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே கொட்டுகிற நடிகர்களை, கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் வருத்திப் பார்க்கிறது அதே சினிமா! கமல், பிரகாஷ்ராஜ், ஆர்யா என்று வரிசைப்படுத்தினால், இந்த கண்ணீரின் ஈரத்தை கவுரவமாக பார்க்கும் நல்ல நடிகர்களின் வரிசை இன்னும் நீளும். நல்லவேளை… இவ்வளவு சோகத்திற்கு பிறகும் ஆர்யாவுக்கென கொஞ்சம் பிசினசும், நல்ல சம்பளம் தர தயாரிப்பாளர்களும் இருப்பதுதான் நல்ல செய்தி.
இப்படி மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டுக் கொண்டேயிருக்கும் ஆர்யா, அடுத்ததாகவும் அப்படியொரு முயற்சியில் இறங்கினார். அதுதான் சந்தனத்தேவன். அமீர்தான் இப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் என்றாலும், தோள் கொடுக்க தன் பேங்க் பேலன்ஸ்சையும் இறக்க முடிவெடுத்தார் ஆர்யா. பார்ட்னர்ஷிப் முறையில் பணம் தர முன் வந்தாலும், வெறும் நடிகன் என்ற பெயர் மட்டும் போதும் என்று இப்படத்தை பொறுத்தவரை முடிவெடுத்தும் இருந்தார் ஆர்யா.
முதல் ஷெட்யூலுக்கே ஆர்யாவின் பணம்தான் இறங்குவதாக இருந்ததாம். ஆனால் ஐயகோ… ஆர்யாவின் கோடிகளை வாங்கி ஏப்பம் விட்ட கடம்பன், இன்னொரு தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்திரியை கவிழ்த்ததுடன் ஆர்யாவையும் அலற விட்டது. பெரும் கடன் தோளில் ஏறிவிட்டது ஆர்யாவுக்கு. அதன் காரணமாகவே சந்தனதேவன் படத்தின் முதல் ஷெட்யூலுக்கு அவர் தருவதாக இருந்த பணம், எங்கே யார் பாக்கெட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல் சைலண்ட் ஆகிவிட்டார் அவர்.
எல்லா பைனான்ஸ் குழப்பங்களும் சரியான பின்புதான் சந்தனத்தேவன் படப்பிடிப்பு ஆரம்பம் என்கிறார்கள். அம்மா மகாலெட்சுமி. ஆர்யா பக்கம் கண் வைம்மா!
https://youtu.be/V4kOUDu3SiY