சந்தானம் பர்ஸ் அபேஸ்…! பெரிய வீட்டு கல்யாணத்தில் பகீர்!
நகைச்சுவை நடிகர் சந்தானம் வன்னியர் என்பதும், சற்றே சாதிப் பாசம் மிக்கவர் என்பதும் பெரும்பாலும் தெரியாத விஷயம். ஒருமுறை அவர் திருச்சியில் ஷுட்டிங்குக்காக தங்கியிருந்தபோது, வேறொரு நிகழ்ச்சிக்காக இவர் தங்கியிருந்த அதே ஓட்டலில் தங்கியிருந்தார் மருத்துவர் ராமதாஸ். ‘தம்பி நம்ம புள்ளதான்’ என்று அவரிடம் ஒருவர் கூற, ‘அடடா… இவ்ளோ நாளு தெரியாம போச்சே, வரச்சொல்லுங்க. மீட் பண்ணுவோம்’ என்றாராம் மருத்துவர். தகவல் சந்தானத்திற்கு போனதும், ‘…ந்தா வந்துர்றேன்’ என்று ஷுட்டிங்கில் பர்மிஷன் போட்டுவிட்டு அறைக்கு திரும்பினார். இவர் வரும்வரைக்கும் வெகு நேரம் காத்திருந்து சந்தானத்தை சந்தித்தார் மருத்துவர்.
நல்லவேளை… சந்தானத்திற்கு முருகதாஸ் மாதிரி பிரச்சனை ஏதும் வரவில்லை. வந்திருந்தால், ‘எனக்கு பின்னாடி எங்க சாதி வராதா?’ என்று கேட்டிருப்பார். நாலைஞ்சு அரசு பஸ்கள் அநாமத்தாக எரிந்திருக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். மருத்துவர் ராமதாசின் பேத்தி திருமணம் சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சந்தானமும் வந்திருந்தார். இவரை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டது கூட்டம். ஹோவென்று அலறிக் கொண்டே அவரை தொட முயன்றார்கள். எப்படியோ கூட்டத்தில் நீந்தி மணமக்களை வாழ்த்திவிட்டு காருக்குள் ஏற முற்பட்டார் சந்தானம். அப்போதுதான் அவரது பர்ஸ் கூட்டத்தில் ‘அடிக்கப்பட்ட’ விஷயம் தெரிய வந்தது. பேரதிர்ச்சிக்கு உள்ளான அவர், ‘பணம் போனா போவட்டும். கிரடிட் கார்டுகள் நிறைய இருக்கு. அதை மட்டுமாவது கொடுக்க சொல்லுங்களேன்’ என்றார்.
மேடையில் இந்த விஷயம் அறிவிக்கப்பட, கடைசி வரைக்கும் ஒருவர் கூட ‘அடித்த’ பர்சை ரிட்டர்ன் பண்ணவே இல்லை.
சந்தானத்திற்கு ஜண்டுபாம் தடவிய அந்த பர்ஸ் பரமானந்தம் இன்று எந்த கடையில் சந்தோஷமாக சரக்கடித்துக் கொண்டிருக்கிறாரோ? (பர்ஸ் அடிச்ச விரல பாம்பு புடுங்கோ…)