கத்தி ஹிட்! விருந்துக்கு போன விஜய்

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா தடவியிருக்க முடியும். அப்படி செய்யாத ஒரு காரணத்தினாலேயே இந்த படம் அதிரி புதிரி ஹிட் என்கிறார்கள் ஏரியாவில்.

இந்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டாமா? குடும்பத்தோடு லண்டனுக்கு கிளம்பிவிட்டார். அங்கிருக்கும் மாமனார் வீட்டில்தான் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம். வருடத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு அங்கு கிளம்பிவிடும் விஜய், இந்த முறை சென்றிருப்பது கத்தி ஹிட்டை கொண்டாடுவதற்குதானாம்.

‘ஏதாவது முக்கியமான விஷயம்னா என்னை வாட்ஸ் அப்ல தொடர்பு கொள்ளுங்க’ என்று கூறிவிட்டு சென்றாராம். அவர் சொன்னபடியே இங்கு வெளியாகும் முக்கிய செய்திகளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் இமேஜ் வடிவத்திலேயே அனுப்பி வைக்கிறார்களாம் அவரது அலுவலக பணியாளர்கள். உடனுக்குடன் அதன் முக்கியத்துவம் கருதி பதிலும் அனுப்புகிறார் விஜய். அங்கிருந்தபடியே தியேட்டர் நிலவரங்களையும் கவனித்து வருவதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையில் அவரது அடுத்த படமான சிம்புதேவன் இயக்கும் படத்திற்காக ஈசிஆர் சாலையில் அமைந்திருக்கும் ஆதித்யா ராம் ரியல் எஸ்டேட்டுக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. அதையும் அவ்வப்போது புகைப்படமாக எடுத்து அனுப்பச் சொல்லி கண்டு ரசிக்கிறாராம் விஜய்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Vanmam Movie Latest Stills

Close