கன்னடத்து பைங்கிளிக்கு கர்வம் மட்டும் போகல? அவமானப்பட்டு திரும்பியோர் அலறல்!

நேற்று கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவிக்கு பிறந்த நாள்! பொதுவாக தனது பிறந்த நாளை அவர் பெங்களூருவில் கொண்டாடுவதுதான் வழக்கமாம். ஆனால் நேற்று சென்னை வந்துவிட்டார். அந்த காலத்து நயன்தாரா அவர்தானே? விஷயத்தை கேள்விப்பட்டதும் அவர் வீட்டின் முன் கூடிவிட்டார்கள் சில நிருபர்கள். இவர்கள் மட்டுமல்ல, அந்தகாலத்தில் சரோஜாதேவியுடன் நடித்த குடுகுடு கலைஞர்களும் அங்கு வந்ததுதான் வியப்பு.

“எப்பவோ பார்த்தது. மறுபடியும் பார்க்கணும்னு தோணுச்சு. வந்துட்டோம்” என்று வாசலில் நின்ற நிருபர்களிடம் புன்னகைத்துவிட்டு உள்ளே போன அவர்களை, ‘போங்க போங்க. போனால்தானே தெரியும்’ என்று புலம்பியபடி வழி விட்டார்கள் நிருபர்கள். ஏனிந்த குறுகுறுப்பு? எல்லாம் காரணமாகதான். சுமார் இரண்டு மணி நேரமாக வாசலிலேயே நிற்கும் இவர்களை உள்ளேயே அனுமதிக்கவில்லையாம் சரோஜாதேவி. “ஏன் இவங்கள்லாம் இங்க வந்து இம்சை பண்றாங்க? நான் யாரையாவது வாங்கன்னு கூப்பிட்டேனா? எனக்கு பிறந்தநாள்னா நானே கேக் வெட்டிட்டு போறேன். இவங்க முன்னாடி வெட்டி, அதை ஊட்டுற மாதிரியெல்லாம் ஸ்டில் எடுத்து? நான்சென்ஸ்… இன்னுமா அப்படியே இருக்காங்க இவங்க” என்று எரிச்சல் பட்டவர், “அப்படியே போகச் சொல்லுங்க அவங்களை” என்று கூறிவிட்டாராம்.

“அட போம்மா…” என்று திரும்பி வந்து தொலைய வேண்டியதுதானே? “இல்லயில்ல. அவரை பார்க்காம போக மாட்டோம். கதவை திறங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினார்களாம் சில நிருபர்கள். (பின்னே விஜயகாந்த் ஏன்யா தூன்னு துப்ப மாட்டார்?) ஆனால் “ரெண்டு மணி நேரம் காத்திருந்து பார்க்கிற அளவுக்கு நீங்க இப்போ வொர்த் இல்ல” என்று கிளம்பி ஓடினார்கள் எரிச்சல் பட்ட சில நிருபர்கள். எப்படியோ கேட் திறக்கப்பட்டதாம். ஆமாம்… இவர்களுக்கு முன் உள்ளே போன குடுகுடு கலைஞர்களின் நிலைமை?

“ஏன் மெனக்கட்டு வந்தீங்க? ஒரு போன்ல சொல்லியிருக்கலாமே உங்க வாழ்த்தை?” என்று கேட்டு அவர்கள் மூக்கிலும் தக்காளி ரசம் கொட்ட வைத்திருக்கிறார் சரோஜாதேவி.

உலகம் 2016 ல் இருக்கு என்பதை சரோஜாதேவி மறந்திருக்கலாம். ஐயோ பாவம்… வாசலில் காத்துக்கிடந்த பேனா புலிகளுக்குமா தெரியாமல் போனது?

1 Comment
  1. தமிழ் தென்றல் says

    இதை போய் நீ பொறந்த பெங்களுருவில் சொல்லி பாரு. தமிழ் நாட்டில் யார் வேண்டுமென்றாலும் பிழைக்க வாருங்கள்.
    ஆனால், நடிகர் சங்கத்தின் பெயர் “தமிழ் நாடு நடிகர் சங்கம்” என்று தான் இருக்க வேண்டும்.
    தமிழன் என்று சொல்லாடா !!! தலை நிமிர்ந்து நில்லடா !!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எமி ஓட்டம், விஜய் தவிப்பு? தெறியை தெறிக்க விட்ட நேரம் காலம்!

இந்த நியூஸ் கேட்டு, நயன்தாரா, தமன்னா, காஜல் வட்டாரங்கள் ஒரு ‘நீலாம்பரி’ புன்னகையை சிந்தினாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், விஜய்யோடு மீண்டும் நடித்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தது...

Close