விக்ரமை வாரிவிட்ட செல்வராகவன்!
இப்ப மட்டும்தான் அப்படியா? இல்ல அப்பவுலேர்ந்தே இப்படியா? என்ற கேள்வியை கேட்க வேண்டிய நேரம் இதுதான் போலிருக்கிறது. விக்ரம் சைன் பண்ணும் படங்கள் எல்லாமே தப்பு தப்பான படங்கள் என்பதை அவரது ஐ -யும் அதற்கு பின் வந்த படங்களும் நிரூபித்துக் கொண்டேயிருக்க, ஒரு புதுக்கதையை சொல்லி, “அட இந்தாளு அப்பவே அப்படிதான் போலிருக்கு” என்ற எண்ணத்தை விதைத்தது ஒரு நிகழ்ச்சி.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும், “நான் சமையல் கட்டுலேயே இல்ல. எதுக்குய்யா அருவாமனை வாய்ல என்னை வச்சு திணிக்கிறீங்க” என்று கவலைப்பட்ட தக்காளிப்பழம் போலாகிவிட்டாராம் விக்ரம். காமெடி…. நடந்தது என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன் தொடரி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது அல்லவா? இதில் கலந்து கொண்டார் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குனருமான செல்வராகவன். தொடரி படத்தை இயக்கியிருப்பது பிரபு சாலமன். அவருக்கும் தனக்கும் உள்ள நட்பின் ஆழத்தை சொல்ல நினைத்தவர் தேவையில்லாமல் விக்ரமையும் சேர்த்துக் கொண்டதுதான் விபரீதம். நானும் பிரபுசாலமனும் பல வருஷத்துக்கு முன்னாடி விக்ரமிடம் கதை சொல்லப் போனோம். ஆனால் என் கதையை விட்டுட்டு அவர் ‘கிங்’ கதையை தேர்ந்தெடுத்து அதில் நடித்தார். அதற்கப்புறம் நான் தனுஷை வைத்து அதே கதையை இயக்கினேன். அதுதான் காதல் கொண்டேன் படம் என்றார் செல்வா.
அப்போது பிரபுசாலமன் இயக்கிய அந்த கிங் பெரிய தோல்வியடைந்ததையும், செல்வராகவனின் காதல் கொண்டேன் தமிழ்சினிமாவின் கலெக்ஷ்ன் ரெக்கார்டையே புரட்டிப் போட்டதையும் டீன் ஏஜை தாண்டிய ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.
இப்ப சொல்லுங்க, விக்ரம் அப்பவே இப்படியா, இல்ல இப்ப மட்டும்தான் அப்படியா?