வேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி! அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி?

கமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால் ஒரு வழக்கில் கூட வெற்றி பெறாத லாயர். அந்த நேரத்தில்தான் ஒரு புது வழக்கோடு அஜீத் வர, “சிக்குச்சுடா பார்ட்டி” என்று சந்தோஷமாகிறார் ஸ்ருதி. இருவரும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இந்த முறை வழக்கில் மட்டும் தோல்வியல்ல, அஜீத்தால் வேறு பல சிக்கல்களும் வந்து தொலைக்கிறது ஸ்ருதிக்கு.

அஜீத் மீது கடும் கோபத்தோடு திரியும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் அஜீத்தை போல நல்லவரில்லை என்பதை அறிந்து கொள்ள, அதற்கப்புறம்? அதான் காதல் பூக்குமே! பூக்கிறது.முழுக்க முழுக்க கொல்கத்தா போர்ஷனில் மட்டுமே இருக்கும் ஸ்ருதி இந்த படத்தில் காமெடிக்கு ட்ரை பண்ணியிருக்கிறாராம். இவருக்கு அசிஸ்டென்ட்டாக வேலை பார்க்கும் அப்ரசண்டு லாயர்கள்தான் பால சரவணனும், சாமிநாதனும்.

காமெடி நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறதாம். படத்தில் ஸ்ருதிதான் நாயகி என்றாலும், இருவருக்குமான லவ் போர்ஷன் குறைவு என்கிறது தகவல்கள்.

Read previous post:
Actor Kamal Haasan Birthday Celebration Stills

Close