நடுவுல கொஞ்சம் ‘கேப் ’ வேணும்! சிவா பதிலால் மெர்சலான அஜீத்!
சில நேரங்களில் சில பதில்கள் ஆச்சர்யப்படுத்தும். உலகத்தமிழர்கள் மத்தியில் அரியாசணம் போட்டு அமர்ந்திருக்கும் அஜீத்தே, ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்… இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில் சொன்னால் எப்படியிருக்கும்? அப்படியொரு பதிலை மங்காத்தாவுக்கு பிறகு சொன்னார் வெங்கட் பிரபு. அதற்கப்புறம் அவரே கிண்டிய பிரியாணியும் இன்னபிற படங்களும் என்னாவாயின என்பதை நாம் சொல்லி அறிய வேண்டியதில்லை.
கிட்டதட்ட அதே போன்றதொரு நிலைமை ரிப்பீட்! இந்த முறை சிறுத்தை சிவா. ஏற்கனவே வீரம் அஜீத்தின் தாறுமாறு ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறது. தற்போது உருவாகி வரும் ‘வேதாளம்’ படப்பிடிப்பில் மீண்டும் சிவாவின் திறமையை பார்த்து வியந்தாராம் அஜீத். நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா? என்று அவரே கேட்க, ‘ஆமென்’ என்று கூறிவிட்டார் சிவா. ஆனால் ஒரு சிக்கல். “நடுவுல எனக்கு கொஞ்சம் கேப் வேணும். வேறொரு ஹீரோவுக்கு கதை சொல்லியிருக்கேன். அதை முடிச்சுட்டு அப்புறமா வர்றேன்” என்றாராம்.
அந்த ஹீரோ சிவகார்த்திகேயன்தான் என்கிறது சில ரகசிய தகவல்கள்!