ஆன மட்டும் போராடி கடைசியில் முடியாதாம்… தமன்னாவால் சிவகார்த்திகேயன் அப்செட்!

அட்டு ஹீரோவாக இருந்தாலும், லட்டு ஹீரோயின்களுடன் ஜோடி போட்டால் மார்க்கெட்டில் அந்தஸ்து மடார் திடீர்தான்! ஆனால் தமிழ்சினிமாவின் முக்கியமான ஹீரோக்களிலேயே முதல் ஐந்திலக்க ஹீரோவில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கே ஸாரி சொல்லிவிட்டாராம் தமன்னா! இதென்னடா புது நியூசு? என்று விழுந்தடித்துக் கொண்டு விசாரித்தால், நெசம்தான் என்கிறது கோடம்பாக்கம்.

லிங்குசாமி தயாரிக்கும் ‘ரஜினி முருகன்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் அல்லவா? அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்களை தேடி தேடி லிஸ்ட் எடுத்தார்கள். அதில் தமன்னாவுக்கு முதலிடம் கொடுத்தார் சிவகார்த்திகேயனும். ஹன்சிகா மோத்வானியுடன் அவர் ஜோடி சேர்ந்தபோதே, கண்ணால் புகையை கொளுத்தி காதால் வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள் அவரை துச்சமென நினைத்திருந்த ஹீரோக்கள் சிலர். அவர்களின் புகையை மேலும் அனலாக்குவது போல, ஹன்சிகாவும் இவருடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார் படப்பிடிப்பில். நல்லவேளையாக அதோடு நிறுத்திக் கொண்டார்கள் இருவரும். ‘ஹன்சிகாவோட நான் நடிக்கதானே செஞ்சேன்? அதுக்கு ஏன்ப்பா இவ்வளவு பொறாமை?’ என்று சிவகார்த்திகேயனே பேட்டிகளில் சலித்துக் கொள்கிற அளவுக்கு போன அந்த பிரச்சனைக்கு அதோடு முற்றுப்புள்ளியும் வச்சாச்சு.

இந்த நேரத்தில்தான் இந்த தமன்னா எபிசோட்! ஏற்கனவே ‘பையா’ படத்தில் நடித்த வகையில் லிங்குவுக்கும் தமன்னாவுக்கும் நல்ல பழக்கமும் இருந்தது. அதனால்தான் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கவும் அழைத்தாராம். ஆனால் முதலில் ஒப்புக் கொண்ட தமன்னா, சம்பள பேச்சு வார்த்தைகள் திருப்தியாக இல்லாததால் ‘மாட்டேன்’ என்று விலகிக் கொண்டதாக தெரிகிறது.

தமன்னா இல்லேன்னு ஆகிருச்சு. பொன்னை வச்ச இடத்தில் பூவை வச்சா பரவால்ல… ஏதாவது நோவை கொண்டு வந்து வச்சுட்டா? இதுதான் சிவகார்த்திகேயனின் இப்போதைய கவலை!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நேரில் வந்த முருகதாஸ் பேசாமல் அனுப்பிய விஜய்?

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக...

Close