நான் வேணா ‘தல ’கிட்ட பேசவா? துடியாய் துடிக்கும் ஏ.எம்.ரத்னம்!

இதுக்கு ஒத்துக்கவே முடியாது. நான் வேணா தலகிட்ட பேசவா? கடந்த சில நாட்களாகவே இப்படி போராடிக் கொண்டிருப்பது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். யாரிடம் இந்த போராட்டம்? அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் கவுதம் மேனனிடம்தான். ஏன் நல்லாதானே போயிட்டு இருக்கு? இப்போ என்ன வந்துச்சாம்?

இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராக்கிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் கவுதம். நடுவில் பிரிந்திருந்த இருவரும் இந்த படத்தின் மூலம் ஒன்று சேர்வார்கள் என்று நாடெங்கிலும் செய்தி பரவி வருகிறது. முதலில் கவுதம் மேனனின் இந்த ரீ டச் ஃபிரண்ட்ஷிப்பை பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை ஹாரிஸ். ஆனால் அஜீத் படமாச்சே என்கிற ஆசையில் இதற்கு பல வார மவுனத்திற்கு பின்பு பதிலளித்துவிட்டார். ‘சரி… நான் மியூசிக் பண்றேன்’ என்பதுதான் அந்த பதிலும். ஆனால் சந்தோஷப்படுவது கவுதம் மேனனாக இருந்தாலும், கலங்கிப் போயிருப்பது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்தான் என்கிறார்கள் இன்டஸ்ரியில். என்னவாம்?

ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏற்கனவே ‘அனுபவித்த’ வலி இருக்கிறது அவருக்கு. பீமா படத்தின் போது சம்பள பாக்கிக்காக ரத்னத்தை கசக்கி பிழிந்துவிட்டாராம் ஹாரிஸ். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு பாடல்கள் போட்டுக் கொடுத்ததிலிருந்து பின்னணி இசையமைத்தது வரை எல்லாமே லேட். இதனால் படம் எப்போது வெளிவருகிறது என்பதை விநியோகஸ்தர்களிடம் சொல்வதற்குள் பெரும்பாடு பட்டாராம் அப்போது. அதே நிலைமை மறுபடியும் ரிப்பீட் ஆக வேண்டுமா என்கிற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், ஹாரிஸ் கேட்கும் சம்பளம்தான் அவரை இன்னும் பதற வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

சுமார் நாலு கோடி வரைக்கும் கேட்கிறார் ஹாரிஸ். கம்போசிங்குக்காக வெளிநாடு செல்வது. அங்கு பெரிய நட்சத்திர ஓட்டலில் சூட் போட்டு ஸாங் போடுவது என்பதெல்லாம் உபரி லட்சங்கள் என்பதும் ரத்னத்தின் கவலையாம். அனிருத் என்றால், இந்த தொல்லை எதுவுமே இல்லை. ஹாரிஸ் சம்பளத்தில் கால் பங்கு கூட அவர் கேட்கப்போவதில்லை. பாடலுக்கும் கியாரண்டி உண்டு. இப்படியெல்லாம் கணக்கு போடும் ஏ.எம்.ரத்னம், ‘நான் வேணா தலகிட்ட பேசவா?’ என்கிறாராம் கவுதமிடம்.

போகிற போக்கை பார்த்தால் ஹாரிஸ். பாட்டு போடும்போதே ‘நிப்பாட்டு’ என்ற கட்டளை வந்தால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

Harris Jayaraj’s demand for salary irks AM Rathnam?

After a long persuasion and intervention by Thala Ajith the disjointed friends director Gautham Menon and Harris Jayaraj will be united as friends in the industry. Of course this will be happy news for the fans of Gautham, Ajith and Harris Jayaraj. However for producer AM Rathnam, it is not a happy reunion as the demand for composing music for the film lies in between 4-5 Crores plus additional expenses that includes going to foreign country for composing music. Though Gautham does not want let go this opportunity to reunite with Harris Jayaraj, the concerned producer insists on employing Anirudh whose salary demand may not even by one fourth of Harris salary demand, say the sources in the know-how. Also apart from the salary demand, AM Rathnam had a bitter experience with Harris Jayaraj earlier for his film Beema and hence does not want to take chances with Harris Jayaraj again. So he asks Gautham Menon if he could speak to Thala for replacing Harris with Aniudh, though it is not yet clear which way the wind will blow!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விக்ரம்… இனிமே நீங்க? குடும்ப மருத்துவர் அட்வைஸ்…

காட்டிலிருந்து வழி தவறிய யானை பல நாட்கள் பட்டினி கிடந்து மீண்டும் காட்டுக்குள் சென்று கரும்பு தோப்பை பதம் பார்ப்பதை போலாகிவிட்டார் விக்ரம். இதுவரை கிடந்த பட்டினிக்கெல்லாம்...

Close