விக்ரம்… இனிமே நீங்க? குடும்ப மருத்துவர் அட்வைஸ்…

காட்டிலிருந்து வழி தவறிய யானை பல நாட்கள் பட்டினி கிடந்து மீண்டும் காட்டுக்குள் சென்று கரும்பு தோப்பை பதம் பார்ப்பதை போலாகிவிட்டார் விக்ரம். இதுவரை கிடந்த பட்டினிக்கெல்லாம் விடை சொல்வதை போல தினந்தோறும் ஆறு வேளைக்கு குறையாமல் சாப்பிட ஆரம்பித்திருக்கிறாராம். அதுவும் மாமிச பட்சிணிகள் அத்தனையையும் அவித்து வேக வைத்து! வேறொன்றுமில்லை, உடம்பை தாறுமாறாக தேற்றி பழைய அழகான கட்டுடல் விக்ரமாக மாறுவதற்குதான் இத்தனை பிரயத்தனம்.

நடுவில் இவரும் இவரது மனைவியும் குடும்ப மருத்துவரை சந்தித்தார்களாம். அப்போது மருத்துவர் சொன்ன அட்வைஸ்தான் தமிழ்சினிமா இயக்குனர்கள் கையேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி. ‘விக்ரம்… இனிமே நீங்க உடம்பை இளைக்கவோ ஏற்றவோ கூடாது. அப்படி செய்தால் அது உங்களின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இதுவரை ஆன வரைக்கும் போகட்டும். இனிமேலாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வெயிட் போட்டு அதையே மெயின்டெயின் செய்யுங்க’ என்று கூறிவிட்டாராம்.

வருடத்திற்கு நாலு படம் என்கிற கணக்கில் சைன் பண்ணியிருக்கும் விக்ரம், ஐ க்கு பிறகு முதலில் நடிக்கப் போவது தரணியின் இயக்கத்தில். அதற்கப்புறம் கோலிசோடா விஜய் மில்டனுக்கு. முதலில் கார்த்தியிடம் கதை சொல்லி ஒப்புதல் வாங்கியிருந்த மில்டன், விக்ரம் கிடைத்ததும் கார்த்தியை கைகழுவி விட்டுவிட்டார். விக்ரம் கால்ஷீட் கிடைத்த தகவலையும் நாலு பேருக்கு தெரியாமல் பாதுகாத்து வந்தபோதுதான், யாரோ ஒரு அவசரக்குடுக்கை தகவலை சந்தைக்கு அனுப்பிவிட்டார்.

‘அதுக்குள்ளே ஏன் சார் வெளியே சொன்னீங்க? என்று விக்ரம் கடிந்து கொண்டதோடு நிற்கிறதாம் மில்டனின் முயற்சி. இருந்தாலும் இந்த நாலு பட லிஸ்ட்டில் மில்டனின் படமும் முக்கியமான இடத்திலிருக்கிறதாம்.

Vikram advised to put up weight and maintain it by his family doctor!

Vikram who was dieting and eating heavily to make his body according to the screen sense in his film Ai, has launched heavy diet to bring back his body to his original shape. After the completion of the shoot of Ai, he visited his family doctor who seems to have advised him, not to entertain any requests for ‘thinning and thickening’ of his body for films, in future. The doctor has also advised him to take more food up to a point till he gets body in shape and maintain his physique well.

Vikram has signed four films now which include director Tharani and director Vijay Milton’s film. He would begin Tharani’s film first after which he would begin shooting for director Vijay Milton. According to sources Vijay Milton’s film was an important one in the list of films Vikram will be doing now.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
tenaliraman audio launch stills

[nggallery id = 445]

Close