வரலாறு கோளாறு ஆச்சுன்னா கோளாறையே வரலாறு ஆக்கிக்கணும்
கீர்த்தி சுரேஷ் வந்ததிலிருந்தே படு நாசமாகிக் கொண்டிருக்கிறது ஸ்ரீ திவ்யாவின் கால்ஷீட் டைரி. இவருக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்தார்களோ, அவர்கள் அத்தனை பேரும் இப்போது கீர்த்தி சுரேஷ் கட்சியில். முன்பெல்லாம் தன்னை நாடி கால்ஷீட் கேட்டு வந்த இயக்குனர்களை கண்டபடி தவிக்கவிட்ட ஸ்ரீதிவ்யா, இப்போது தானே போன் அடித்து… “சவுக்கியமா?” என்று கேட்கிற நிலைமைக்கு போய்விட்டார்.
வரலாறு கோளாறு ஆச்சுன்னா, கோளாறையே வரலாறு ஆக்கிக்கணும் என்று யார் கற்றுக் கொடுத்தார்களோ? சின்ன சின்ன ஹீரோக்கள் நடிக்கிற படங்களில் நடிக்க வேண்டி விசாரித்தால் கூட, ‘‘நல்ல சம்பளம்னா சொல்லுங்க. என் பொண்ணை நான் கன்வின்ஸ் பண்றேன்” என்கிறாராம் ஸ்ரீதிவ்யாவின் தாய்குலம். பொண்ணு மார்க்கெட்ல வளர்ந்து நின்றபோதும் சரி, வளைஞ்சு விழுந்தபோதும் சரி. அம்மாதானே கால்ஷீட் மேனேஜர்? இப்போது அவருக்குதான் பொறுப்பு ஜாஸ்தியாகிவிட்டது.
எல்லாம் இந்த கீர்த்தியால் வந்த கிலேசம்!