கழுத்தை சுற்றி கடன்! கை மட்டும் தாராளம்! வியக்க வைக்கும் விஷால்?
நடிகர் விஷாலுக்கு சொந்தப்படம் எடுத்த வகையில் பல கோடிகள் நஷ்டம். பல இடங்களில் பைனான்ஸ்… வட்டி… என்றுதான் நாட்கள் நகர்கிறது. இருந்தாலும் தனது ட்ரஸ்ட் மூலம் அவர் செய்து வரும் நல்ல காரியங்கள் கொஞ்ச நஞ்மல்ல. தஞ்சாவூர் விவசாயிக்கு டிராக்டர் கடன் முதல், துணை நடிகரின் மனைவிக்கான மருத்துவ செலவு வரைக்கும் தன் சொந்தப்பணத்தை அள்ளி வீச ஆரம்பித்திருக்கிறார். ஏதோ திடீரென வந்த ஈகை குணமல்ல அது. அப்பவுலேர்ந்தே அப்படிதான் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அவரது நலன் விரும்பிகள்.
இது ஒருபுறமிருக்க, பொதுப்பணி லொட்டு லொஸ்கு என்று எப்போதும் வெளியிலேயே சுற்றி வரும் மகன், வாரத்திற்கு ஒரு முறைதான் வீட்டுக்கே வருகிறார் என்ற கவலை அவரது பெற்றோருக்கு இருக்கிறதாம். சீக்கிரம் கால் கட்டு போட்டுடணும் என்று முன்னைவிட வேகமாக வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கம் போல ஐயா ஒரே பதிலை சொல்லிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்.
நடிகர் சங்கத்தின் புது பில்டிங்லதான் தாலி கட்டுவேன்னு சொன்னாலும் சொல்வார்.