என் புருஷனை துன்புறுத்தாதீங்க… பதறிய தேவயானி

‘எழுதி வச்சுக்கங்க… இந்த படம் 100 நாள் ஓடும் ஓடும்… ஓடியே தீரும்…’ என்று தான் இயக்கிய ‘திருமதி தமிழ்’ பட நேரத்தில் பல்லை கடித்துக் கொண்டு குறிப்பிட்ட தேவயானி கணவர் ராஜகுமாரனை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. என்னைய யாரும் கமெடி பண்ணிர முடியாது. நான் ரொம்ப சீரியஸான ஆளு என்றெல்லாம் முகத்தை தக்காளி சிவப்பில் வைத்துக் கொண்டு கோபப்பட்ட ராஜகுமாரன், இப்போது சந்தானத்திடம் சரணாகதி. வொய்? வொய்? வொய்?

சர்விவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்!

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்கிறாராம் இந்த சோலார் ஸ்டார். இவர் நடிப்பதை பற்றி தன் வாயாலேயே பகிர்ந்து கொண்டார் சந்தானம். ‘திருமதி தமிழ் பட போஸ்டர்களில் வாயில ஜாங்கிரிய வச்சுகிட்டு ஒரு ஆள் இருப்பதை பார்த்தேன். (அவர் லிப்ஸ்டிக் போட்டிருப்பதைதான் இப்படி வர்ணிக்கிறார் சந்தானம்) அப்படிப்பட்ட ஆளுங்களை விடக் கூடாது. கண்ல பட்டா உடனே துக்கிரணும். எங்கிருந்தாலும் துக்கிட்டு வந்துருங்கன்னு சொன்னேன்.

அவர் வரும்போதே துணி மணியெல்லாம் அள்ளிப் போட்டுகிட்டு வந்துட்டாரு. அவரை காணோம்னு அவங்க வீட்ல ரெண்டு நாளா தேடி கடைசியா தேவயானி மேடமே லைன்ல வந்துட்டாங்க. ‘அவரு அங்கதான் இருக்காராமே? ரொம்ப டேமேஜ் பண்ணிராதீங்க’ன்னு கேட்டுகிட்டாங்க. அவரும் ‘என்னைய ரொம்ப டேமேஜ் பண்ற மாதிரி டயலாக் வைக்காதீங்க’ன்னு கேட்டுகிட்டார். இல்ல சார். நீங்களும் கவுன்டருக்கு என்னை கலாய்க்கலாம்னு சொல்லி நடிக்க வச்சுருக்கோம் என்றார் சந்தானம்.

சந்தானம்… இ.பி.கோ வின் எல்லா செக்ஷன்களையும் ஒரு கை பார்த்த பவர் ஸ்டாரையே வளர்த்துவிட்ட ஆளு நீங்க. படம் எடுத்து கடன்ல இருக்கிற அப்பாவி ராஜகுமாரனுக்கா நல்வாழ்வு கொடுக்க மாட்டீங்க?

காத்திருக்கிறோம் சோலார் ஸ்டாரின் பர்ஃபார்மென்சை காண்பதற்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்தானத்திற்கு யார் மீது கடுப்பு?

கூரையேறி கோழி பிடிக்க வந்தவங்க பல பேரு வானம் ஏறி நட்சத்திரம் பறிச்ச கதை சினிமாவுக்கு புதுசல்ல! அள்ளிய நட்சத்திரத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்வது அவரவர்...

Close