ரொம்ப நாள் கழிச்சு மல்லிகைப்பூ வாசனை! சூர்யா குஷி
இன்று பதினைந்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் எல்லா ஹீரோக்களையும் விட, சூர்யாவே உயர்ந்தவர்! ‘ஊர்ல பண்ணுற புண்ணியத்தையெல்லாம் விட பெரிய புண்ணியம் ஏழைக்கு எழுத்தறிவித்தல்தான்’ என்ற முதுமொழிக்கேற்ப, அகரம் பவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதையும் அறிவுள்ளவர்கள் வசம் ஒப்படைத்து சிறப்பாக நடத்தி வருகிறார் அவர். இன்று அந்த அகரம் பவுண்டேஷன் தனது பார்வையை இன்னும் கூட விஸ்தாரமாக்கியிருந்தது.
ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ திரைப்படம் பரவலான அளவில் ஹிட்! (மால் தியேட்டர்கள் வந்த பின் இதுபோன்ற நல்ல படங்களுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்கிறார் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா) படத்தின் கருத்தே ‘பெண்கள் சுய மரியாதையோடு வாழ வேண்டும். சொந்தக்காலில் நிற்க வேண்டும்’ என்பதுதான். அதை இந்த படத்தில் நிரூபித்த ஜோதிகா முன்னிலையில் 25 ஏழை, மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் விதத்தில் பண உதவி வழங்கப்பட்டது. ஒருவருக்கு காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்பது கனவு. இன்னொரு பெண்ணுக்கு சொந்தமாக ஓட்டல் வைக்க வேண்டுமென்ற கனவு. வேறொருவருக்கு ‘எம்பிராய்ட்ரி மெஷின் இருந்தால் எக்கச்சக்கமாக டிசைன் வரையலாமே’ என்பது.
தனது திருமணம் நிச்சயம் ஆன ரெண்டாவது நாளே இரண்டு கால்களையும் பறிகொடுத்த பெண் ஒருவருக்கு பியூட்டி பார்லர் வைப்பதுதான் லட்சியம். இப்படி எல்லாருடைய லட்சியத்தையும் நிறைவேற்ற உதவி செய்தது அகரம் பவுண்டேஷனும், சூர்யா குடும்பத்திற்கு எப்போதுமே உறுதுணையாக இருக்கும் சக்தி மசாலா குடும்பமும்! எங்க பயணம் இந்த 25 பேரோட நிற்கப் போறதில்ல. இன்னும் தொடரும் என்றார்கள்…
உதவிகளை வாரி வழங்குவதற்கு முன் இந்த படத்தின் வெற்றி பற்றி நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார் சூர்யா. ‘எங்க குழந்தைகள் பெயரில் நாங்க துவங்கிய 2டி பட நிறுவனத்தின் மூலம் தயாரிச்ச இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு தியேட்டர்ல மல்லிகைப்பூ வாசனை அடிக்கிறதா சொல்றாங்க. பெண்கள் கொத்து கொத்தா தியேட்டருக்கு வர்றாங்க. இப்படியொரு கதையை படமாக எங்களுக்கு தந்த டைரக்டர் ரோஷன், எழுத்தாளர் விஜி, மியூசிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட அத்தனை படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றி’ என்றார் சூர்யா.
இந்த பிரஸ்மீட்டில் அறிவிக்கப்பட்ட நல்லசெய்தி ஒன்று. இனி ஜோதிகா தொடர்ந்து நடிப்பாராம். அதுவும் நல்ல கதைகள் வந்தால் வெளி கம்பெனி படங்களில் கூட நடிக்க தயார் என்றார் அவர் வாயாலேயே! கவுரவமான கதைகளோடு 2டி யின் கதவை தட்டுகிறவர்களுக்கு ஜோதிகாவின் கால்ஷீட் உடனடியாக கூட கிடைக்கலாம். கூடவே சூர்யாவின் கால்ஷீட்டும்! அதெப்படி? அதான் நல்ல கதையா இருந்தால் நாங்க மறுபடியும் ஜோடியா நடிப்போம்னு சொல்லிட்டாரே சூர்யா?
Congrats.
Wonderful pair, nice to see you two
This article is meaningfull, interesting. thank you for sharing
Excellent article..Thanks for sharing,.
Best Electrical Project Center in Chennai | Best Electrical Project Center in Velachery
Very informative blog. Helps to gain knowledge about new concepts and techniques. Thanks a lot for sharing this wonderful blog.keep updating such a excellent post with us.
Best MatLab Training Institute in OMR | No.1 MatLab Training Center in OMR