அதெப்படி போவலாம்…? ஸ்ருதிக்கு எதிராக ஒன்று திரளும் ஆந்திரா படவுலகம்!

ஒற்றுமை விஷயத்தில் தமிழனை போல இல்லை மற்றவர்கள். கதர் சட்டையோ, காவி சட்டையோ, வெள்ளை சட்டையோ, வெளிர் நீல சட்டையோ, கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு விட்டுதான் வேறு வேலை பார்ப்பார்கள் தமிழர்கள். எல்லா சங்கங்களுக்கும் இந்த விதி பொருத்தமாக இருந்தாலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை இந்த சட்டை கிழிப்பு சமாச்சாரம் சத்யமூர்த்தி பவனுக்கே சவால் விடுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது. ‘அண்டை மாநிலத்தை பார்த்தாவது திருந்துங்கப்பா…’ என்று சக தயாரிப்பாளர்கள் சுட்டிக் காட்டும் விவகாரம் இதுதான்.

எவடு என்கிற தெலுங்கு படப்பிடிப்பில் கேஷுவலாக சில மூவ் மென்ட்டுகள் செய்து கொண்டிருந்தாராம் ஸ்ருதி. பொதுவாக கேமிரா ஓடும்போது கவனமாக இருக்கும் நடிகைகள் ரிகர்சல் நேரங்களில் ரிலாக்ஸாகவே இருப்பார்கள். மேலாக்கு மூடியிருக்கா, கீழாக்கு கிழிஞ்சிருக்கா என்பதெல்லாம் அந்த நேரத்தில் அக்கறையோடு கவனிக்கவும் மாட்டார்கள். ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷன் என்றதுமே, படத்தில் நமது அங்கம் எந்தளவுக்கு தெரிய வேண்டுமோ, அதற்கு மேல் துளி இஞ்ச் கூட தெரியாதளவுக்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். இது எல்லா நடிகைகளுக்கும் பொருந்தக்கூடிய உணர்வுதான்.

ஸ்ருதியும் அவ்வாறு ரிகர்சல் நேரத்தில் அசால்ட்டாக இருந்துவிட்டார். இதையெல்லாம் திருட்டு தனமாக படமெடுத்த ஒரு ஸ்டில்கிராபர் எல்லாவற்றையும் இணையதளங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் விற்றுவிட்டார். கண் திறந்து மூடுவதற்குள், திரும்பிய இடமெல்லாம் தினுசு தினுசாக ஸ்ருதியின் ஸ்டில்கள். இதையெல்லாம் பார்த்து நரம்பு முறுக்கேறி நண்டு போல ஆகிவிட்டார்கள் பல ஆந்திர இளைஞர்கள். கொஞ்சம் லேட்டாக இவையெல்லாம் ஸ்ருதியின் பார்வைக்கு போக, விட்டேனா பார் என்று போலீசுக்கே போய் புகார் கொடுத்துவிட்டார்.

மற்றவர்கள் வந்தால் கட்டிங் கொடுத்தால்தான் கதை நடக்கும். ஆனால் நடிகைகளே நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தால், கட்டிங் பிளேயர் கண்களோடு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுமே போலீஸ்? படப்பிடிப்பில் அக்கம் பக்கத்து புளோர்களில் படம் எடுத்துக் கொண்டிருந்த சுமார் இருபது போட்டோகிராபர்களை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து நைய புடைத்துவிட்டார்களாம். எங்ககிட்ட முறையிடாமல் எப்படி போலீசுக்கு போகலாம்? ஸ்ருதிக்கு யூனியன்லேர்ந்து ரெட் போடுங்க. அவரை தெலுங்கு ஏரியாவுலேயே நடமாட விடக்கூடாதுன்னு முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டார்கள் ஆந்திரா தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்.

கேட்காமலேயே மூடிய திறந்து முட்டை போண்டா வித்தவனெல்லாம் கூடி நின்று கோஷம் போடுறது நல்லாவா இருக்கு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கை வைக்காத பனியன்தான் காஸ்ட்யூம்! அரண்டு ஓடிய நடிகைகளுக்கு மத்தியில் அருந்ததியின் தில்!

அருந்ததியே நமஹ.... அரைகுறை கவர்ச்சியே நமஹ... ஆஃப் டிரஸ்சே நமஹ... என்று கடந்த ஒரு வருட காலமாகவே தமிழ்நாட்டு இளைஞர்களை ஒரு படம் தவிக்க விடுகிறது என்றால்...

Close