கேப்டன் ஆஃப் த பிரண்ட்ஷிப் ஆர்யாவுக்கு தமன் கொடுத்த பட்டம்!
‘சிக்கலில் மீகாமன். ஆர்யா விட்டுக் கொடுத்த ஆறு கோடி’ என்ற தலைப்பில் கடந்த 22 ந் தேதி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். (https://wh1049815.ispot.cc/meegaman-in-critical/) தனது படம் வெளியாவதற்கு ஆர்யா செய்த உதவியை பாராட்டிதான் அந்த செய்தி வெளியாகியிருந்தது. இது உண்மையாக இருக்குமா, இப்படியெல்லாம் கூட சம்பளத்திற்கு மாரடிக்கிற ஹீரோக்கள் இதய பூர்வமாக செய்துவிடுவார்களா?’ என்று ஆச்சர்யப்பட்ட ரசிகர்களுக்கு இன்று ‘மீகாமன்’ டீம் வாயாலேயே அந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டது.
இன்று செய்தியாளர்களை சந்தித்தது மீகாமன் டீம். ‘படத்தின் வெற்றிக்கான சந்திப்பு இது’ என்று சந்தோஷமாக பேச ஆரம்பித்தார் இயக்குனர் மகிழ் திருமேனி. இந்த படம் எப்படியெல்லாம் ரசிகர்களை மகிழ்வித்தது என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரஸ்மீட்டுக்கு என்ட்ரி கொடுத்தார் மீகாமன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன். அதற்கப்பும் மைக் அவர் கையில் செல்ல, கொட்டி தீர்த்துவிட்டார் தமன்.
‘நான் இங்க வந்ததே மச்சான் உன்னை பற்றி பேசதான்’ என்றார் ஆர்யாவை பார்த்து. அதற்கப்புறம் மடை திறந்த வெள்ளம் போல அவரிடமிருந்து வெளிப்பட்டன வார்த்தைகள். ‘ஆர்யாவை கேப்டன் ஆஃப்த ஷிப்புன்னு சொல்லலாம். ஆனால் கேப்டன் ஆஃப் த பிரண்ட்ஷிப்புன்னு சொல்லுவேன் நான். இன்னைக்கு நாங்க இங்க நின்று இந்த படத்தின் சக்சஸ் பற்றி பேசிகிட்டு இருக்கோம்னா அதுக்கு மச்சான் ஆர்யாதான் காரணம். டைட்டானிக் கப்பல் மாதிரி மூழ்கவிருந்த இந்த படத்தை காப்பாற்றியதே அவர்தான்’ என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.
‘ஷுட்டிங் சமயத்தில் ஒரு காட்சியில் நடிச்சு முடிச்சுட்டு ஹன்சிகா ஓ…ன்னு அழுதுட்டதா சொன்னீங்க, ஆனால் படத்துல அவங்களை ஒண்ணும் அப்படி முழுசா காட்டலையே?’ என்றார் ஒரு நிருபர் ஏக்கத்துடன். அரங்கமே கொல்லென்று சிரிக்க, அதற்கு ஒரு பதில் சொன்னார் பாருங்கள் மகிழ்திருமேனி! ‘இந்த படத்துல ஹன்சிகாவை விட ஆர்யாதான் கவர்ச்சியா இருக்கார். அவரது கவர்ச்சியை பார்க்கலையா நீங்க?’
ம்ஹும்… மருவாதியா இந்த நியூசுக்கு ‘என்ட்’ போட்ற வேண்டியதுதான்!