கொள்ளையடிக்கும் ஏஜிஎஸ்! கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்!

யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம் வந்துவிட்டது. “நம்ம தியேட்டர்காரங்கதானே… சம்பாதிச்சுட்டு போகட்டும்” என்று பெரிய மனசு பண்ணி இறங்கி வந்தார் கபாலி தயாரிப்பாளர் தாணு. தெறி கோபத்தை மனதில் வைத்துக் கொள்ளாத அவர், கபாலியை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட எவ்வித கட்டுப்பாடும் காட்டவில்லை என்பதே பல தியேட்டர்காரர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

ஆனால் அவர்களின் சந்தோஷத்தில், தக்காளி கலரை வரவழைத்துவிட்டது ஏ.ஜி.எஸ் நிறுவனம். கபாலி படத்தின் செங்கல்பட்டு ஏரியாவை வாங்கியிருப்பது இந்த நிறுவனம்தான். இவர்களின் மகத்தான சாதனை என்ன தெரியுமா? தமிழ்நாடு முழுக்க எல்லா ஏரியா தியேட்டர்களும் கபாலிக்கான முன் பதிவு கவுன்ட்டரை திறந்து… திறந்த வேகத்தில் எல்லா டிக்கெட்டுகளையும் விற்று தீர்த்துவிட்டு மூடிவிட்டன. ஆனால் செங்கல்பட்டு ஏரியாவை சேர்ந்த பல தியேட்டர்களில் ஒரு போர்டுதான் பளிச்சென வைக்கட்டுள்ளது. என்னவென்று?

‘கபாலி படத்திற்கு முன் பதிவு இல்லை’ என்ற வாசகம் அடங்கிய போர்டு. இதை காணும் ரசிகர்கள், விஜய் படம் வராமல் போனது மாதிரி இப்பவும் நடந்துவிடுமோ என்று கவலை கொண்டு தியேட்டர் நிர்வாகத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். அவர்களிடம், “ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதிக விலை சொல்றாங்க. அதனால் பேச்சு வார்த்தை நடக்குது. எல்லாம் சுமூகமாக முடிந்தால் நம்ம தியேட்டர்ல கபாலி வரும். இல்லேன்னா… இல்லதான்” என்கிறார்களாம்.

சென்னையில் ஆங்காங்கே டிரங்க் பெட்டி போல தியேட்டரை கட்டி, அதில் விலங்குகளை அடைப்பதை போல ரசிகர்களை அடைக்கும் ஏ.ஜி.எஸ், கபாலி விஷயத்திலும் அப்படி அரக்கத்தனமாக நடந்து கொள்வது சரியல்ல… முறையல்ல. என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீனோடு நடிச்சாரா, மீனாவோடு நடிச்சாரா! இப்படி சந்தோஷப்படுறாரே சிபிராஜ்?

நாய், நரி, பூனை, புலிக்குட்டி என்று நடிப்பதற்கு தயாராக இருக்கும் விலங்குகளில் பாம்புக்கு மட்டும்தான் ஃபுல்லாகிறது கால்ஷீட் டைரி. அதுவும் ஆடி மாதம் வந்தால், ரிலீஸ் பண்ணுவதற்காகவே...

Close