த்ரிஷா- நயன்தாரா- சிம்பு மூடப்பட்ட அறையில் நடந்ததென்ன?

இந்தியாவும் பாகிஸ்தானுமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்போது, நயன்தாராவும் சிம்புவும் வர மாட்டார்களா என்ன? ஜெயம் ரவி கொடுத்த மதி மயங்கும் சுதி பார்ட்டியில் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக் கொண்ட சிம்புவும் நயன்தாராவும் அது நடந்து சில நாட்களிலிலேயே வேறொரு பார்ட்டியில் கலந்து கொண்டதும், கட்டி பிடித்துக் கொண்டதும், ‘உலகம் சுத்துவது உண்மைதான் மாப்ள…’ சமாச்சாரம்.

த்ரிஷாவின் பர்த் டே பார்ட்டியில் எடுக்கப்பட்ட அந்த படத்தை திட்டமிட்டே ட்விட்டரில் வெளியிட்டாராம் த்ரிஷா. ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்கல்ல…? என்பதை நாட்டுக்கு அறிவிக்கும் மிகப்பெரிய திட்டம்தான் அந்த போட்டோ கசிய விட்ட கதை. அந்த பார்ட்டியில் நடந்ததென்ன? பல வாரங்கள் கழித்து இப்போது லேசாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. வேறொன்றுமில்லை. ஒரு தனி அறைக்குள் த்ரிஷா, நயன்தாரா, சிம்பு மூவரும் அமர்ந்து கொண்டு எதிர்காலத்தை பற்றி விடிய விடிய பேசினார்களாம்.

இந்த சந்திப்பில் இருவரையும் சமாதானப்படுத்த பெரிதும் முயன்றவர் த்ரிஷாதானாம். ஒரு காலத்தில் எலியும் பூனையுமாக இருந்த நயன்தாராவும் த்ரிஷாவும் இப்போது இந்தளவுக்கு மாறியிருப்பதுதான், கழண்டுபோன காதல் ஜோடி மீண்டும் இணைந்ததை விட பெரிய விஷயமாக பேசப்படுகிறது இங்கே.

காதல் வையாபுரியை கூட வஞ்சிக்கோட்டை வாலிபனாக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான் என்றாலும், இந்த காதல் பஞ்சாயத்துக்கு பிறகு இருவருக்குள்ளுமே ஒரு வெள்ளை புறா பறந்து கொண்டிருப்பதாக கதைக்கிறார்கள். அந்த புறாவை மீண்டும் ஃபிரை பண்ணாமலிருப்பது அவரவர் மூட் எப்படி என்பதை பொறுத்தது.

நல்லாயிருக்கட்டும் ஜோடி… அதுதான் நம்ம பிரார்த்தனை.

Read previous post:
த்ரிஷா வருமா கேளு… வடிவேலு விருப்பம்

இது த்ரிஷாவுக்கு வந்த சறுக்கலா? வடிவேலுக்கு வந்த பெருக்கலா? அந்த கடவுளுக்கே வெளிச்சம். கடந்த சில நாட்களாகவே வடிவேலுவின் திருட்டு முழி த்ரிஷா பக்கமாக திரிகிறதாம். கோயமுத்துர்ல...

Close