தொழிலாளர்களுக்கு ஜெயில்? கண்டுகொள்ளவாரா ஏ.ஆர்.முருகதாஸ்?!

பரங்கிக்காய் விழுந்து சுண்டைக்காய் நசுங்கிய மாதிரிதான் தொழிலாளர்களின் வாழ்க்கை. அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரியான பெரிய பரங்கிக்காய்கள் விழுந்தால், ஐயோ பாவம்… இவர்கள்தான் என்ன செய்வார்கள்? விஷயம் ரொம்ப சீரியஸ். ஆனாலும் கோடம்பாக்கத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. ‘ரங்கூன்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் முருகதாஸ். இதை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். கவுதம் கார்த்திக்தான் ஹீரோ. அனிருத் இசை. ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறார்.

சமீபகாலமாக பர்மாவை குறிவைத்திருக்கும் முன்னணி இயக்குனர்களின் ஸ்டைலில் இவருக்கும் இந்த படத்தை பர்மாவில் எடுக்க வேண்டும் என்கிற ஆசை. அல்லது கதையே அங்கு நடப்பதாக கூட இருக்கலாம். எனிவே… போனோமா? பிரச்சனையில்லாமல் எடுத்தோமா? என்று வர வேண்டுமல்லவா? எங்கு வேண்டுமானாலும் கேமிராவை வைத்து எடுத்துவிட்டு, சைட்ல கட்டிங் கொடுத்து கரெக்ட் பண்ணிக் கொள்வதற்கு அது தமிழ்நாடா, பாண்டிச்சேரியா?

பர்மிஷன் வாங்காமல் சில இடங்களில் ஷுட்டிங் எடுத்தார்களாம். அவ்வளவுதான்… அந்நாட்டு போலீஸ் ஒரே அமுக்காக அமுக்கிவிட்டது. என்னென்னவோ பேசியும் எடுபடவில்லையாம். வேறு வழியில்லாமல் தங்களது தயாரிப்பு நிர்வாகிகள் சிலர் மீது பழியை போட்டுவிட்டு தப்பிவிட்டதாம் படக்குழு. இப்போது இரண்டு தயாரிப்பாளர் பர்மா சிறையில் களி தின்று கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் முருகதாஸ் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெப் என்ன? கையை பிசைந்து கொண்டு காத்திருக்கிறார்கள் சக தொழிலாளர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி! அதை லட்சுமிமேனன் வாயால கேளுங்க…

சமீபத்திய படங்களில் கொம்பனுக்குதான் கோலாகல வெற்றி. அந்த படம் ரிலீசானா திருநெல்வேலியில் குத்துவெட்டு நடக்கும். மக்களின் அமைதி வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை என்றெல்லாம் முழங்கிய டாக்டர் ஐயாவின் பேச்சு,...

Close