என் உடம்புல ஆவி பூந்திருச்சு! வடிவேலு கன்பியூஸ்!
“வர்தா புயலை அடக்க வைகைப்புயலை கொண்டு வந்திருக்கோம்…” என்று மெய் சிலிர்த்தார் கத்தி சண்டை பட இயக்குனர் சுராஜ். தலைநகரம், மருதமலை என்று வடிவேலுவும் இவரும் இணைந்த படங்களுக்கு இப்போதும் மவுஸ் என்றால் மவுஸ். அப்படியொரு மவுசு! முக்கியமாக மீம்ஸ் அராஜகர்களின் ஒரே புகலிடம், இது போன்ற வடிவேலுவின் படங்கள்தான்.
கத்தி சண்டை பிரஸ்மீட்டுக்கு வந்த வடிவேலுவை பல்வேறு கேள்விகள் சூழ்ந்து கொள்ள… ஒரு கேள்விக்கு மட்டும் செம கன்பியூஸ் ஆனார் மனுஷன்.
உங்க உடம்புல என்.எஸ்.கலைவாணர் ஆவி இறங்கிருச்சு போலிருக்கே? என்பதுதான் அது. சற்றே ஜெர்க் ஆன வடிவேலு, ஆமாண்ணே… என் உடம்புக்குள்ள அவரு ஆவி மட்டுமா இறங்கிருக்கு? யார் யார் ஆவியோ இறங்கிருச்சுண்ணே… என்றார் சீரியஸ்சாக. நடுவுல நிறைய படங்கள் வந்திச்சு. நான் நடிக்கலேண்ணே. ஏன்னா… ரெண்டு சீன் இருக்கு. நாலு சீன் இருக்குன்னு வர்றாங்க. நம்ம ரசிகர்களுக்கு நான் புல்லா வந்தால்தான் புடிக்கும். அதனால் வேணாம்னு மறுத்துட்டேன். லிங்காவுல கூட ரஜினி சாருடன் செகன்ட் ஹாஃப்ல நாலு சீன் நடிக்கணும்னு கேட்டாங்க. மறுத்துட்டேன்.
இந்த கத்தி சண்டையில் விஷால் விரும்பி கேட்டதாலயும், எனக்கு நடிக்கறதுக்கு நிறைய ஹோப் இருக்கறதாலயும் ஒத்துகிட்டேன். பூத்ரின்னு ஒரு டாக்டர் கேரக்டரு. சும்மா பிரிச்சு மேய்ஞ்சுருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க என்றார்.
வடிவேலுவின் விக்கும், அந்த லுக்கும், மருதமலையையும், தலைநரகத்தையும் கூட பின்னால தள்ளிவிடும் போலிருக்கே?
தமிழ்நாடே வெயிட்டிங்!