அன்றே சொன்னோம் அதுதான் நடந்தது!

2015 அக்டோபர் மாதமே, ‘விட்ட இடத்தை பிடிக்க வருகிறார் வடிவேலு! போற ரூட் புது ரூட்!’ https://wh1049815.ispot.cc/vadivelu-takes-new-root/ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். அதில் வடிவேலு நடிகர் சங்க தேர்தலில் இளம் ஹீரோக்களுடன் நட்பு பாராட்டிய விஷயத்தையும், மீண்டும் விஷால் படத்தில் வடிவேலு நடிக்கப் போகிறார் என்றும் கூறியிருந்தோம். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நாம் சொன்ன அந்த விஷயத்தை இப்போது மெய்ப்பித்திருக்கிறார் விஷால்.

பிரபல சிரிப்புக்கதை மன்னன் சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கப் போகும் படத்திற்கு கத்தி சண்டை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த கத்தி சண்டையில்தான் கம்பீரமாக ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் வைகைப்புயல்.

பொதுவாகவே மூடி வைத்தது பிரியாணியாக இருந்தால் பொண நாத்தம் நாறும். அதுவே சாம்பிராணியாக இருந்தால், நாசிக்கே நறுமணப் புத்துணர்ச்சி கிடைக்கும். வடிவேலுவின் காமெடி என்பது இத்தனை நாட்களாக மூடி வைத்த சாம்பிராணியாக இருந்தது. அதை புகைய புகைய நாட்டுக்கே போடப் போகிறார் சுராஜ். இந்த மறுமலர்ச்சி கூட்டணிக்கு மனமார ஒரு வெல்கம் சொல்வோம்.

ஆமா… சில தினங்களுக்கு முன் வடிவேலு அசத்திய அந்த சன்.டி.வி நிகழ்ச்சியை பார்த்தீங்களா மக்கழே….? புயலு புயலுதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மே 1… அஜீத்! தயாராகிறது பின்னி மில்!

நடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்து பல மணி நேரம் ஆச்சு! “....டாரு, ...மாட்டாரு,...

Close