மே 1… அஜீத்! தயாராகிறது பின்னி மில்!

நடிகர் சங்கம் சார்பில் நடக்கவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு அஜீத் வருவாரா, மாட்டாரா என்ற கேள்விக்கெல்லாம் விடை தெரிந்து பல மணி நேரம் ஆச்சு!

“….டாரு, …மாட்டாரு, ….வரமாட்டாரு, ….வரவே மாட்டாரு” என்பதாக முடிந்துவிட்டது அந்த எதிர்பார்ப்பெல்லாம்!

“அவர் கால் இன்னும் குணமாகலே” என்று இப்போதைக்கு பதில் சொல்லப்பட்டிருக்கிறதாம் நடிகர் சங்கத்திற்கு. இது ஒரு புறமிருக்க, அஜீத்தின் புதிய படத்துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார்.

பொதுவாகவே அஜீத் படத்தின் பூஜைகள் அடக்கமாக, ஆபிஸ் வளாகத்திற்குள் நடந்துவிடும். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பாளராக இருந்தால், சற்றே நாலு எட்டு வெளியில் வந்து வாசலில் இருக்கும் சாய்பாபா கோவிலில் ஒரு கற்பூர ஆரத்தி, கன்னத்தில் போட்டுக் கொள்ளல் என்று அந்த சம்பிரதாயம் நீளும்! இந்த முறை அப்படியெல்லாம் சிம்பிளாக இருக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர் தரப்பில். தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் சத்யஜோதி தியாகராஜன் இருப்பதால், சங்கத்தில் பொறுப்பிலிருக்கும் இன்னபிற தயாரிப்பாளர்களையும் அழைத்து நடத்தவே விரும்புகிறாராம் அவர்.

இதற்காக பின்னி மில்லை இப்போதே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிவிட்டார்கள். இந்த நிமிஷம் வரைக்கும் இதுதான் ப்ரோகிராம். ஒருவேளை அஜீத் தலையிட்டு, ‘‘அதெல்லாம் வேணாம்” என்று சொல்லிவிட்டால்?

அதெல்லாம் வேணாம்தான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முழங்கறது தமிழுக்காக! புழங்கறது சமஸ்கிருதம்!! கண்ணை கட்டுதே கமல் பாலிஸி?

தன் ரசிகர்களுக்காக நடத்தி வந்த ‘மய்யம்’ இதழில் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார் கமல்! தலைவர் என்னமோ சொல்ல வர்றாரு. தமிழ் வாத்தியாருங்களுக்காவது புரியுதா பார்க்கலாம் என்று மய்யம்...

Close