வடிவேலு மகள் கல்யாணம் விஜயகாந்த் முடிவில்தான் இருக்கிறது! கட்டப்புள்ள…வுட்றாத!!!

மூன்று மகள்களும், ஒரு மகனும் கொண்ட இனிய இல்லறம்தான் வடிவேலுவுக்கு. அதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்ட வடிவேலு, அதற்கப்புறம் வெயிட்டிங்கில் இருக்கும் கன்னிகா, கனிஷ்கா இருவருக்கும் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார். அந்த மாப்பிள்ளைகளும் குடும்பத்துக்கு அடங்கிய பிள்ளைகளாக, ஆர்ப்பாட்டமில்லாத பையன்களா இருந்தா போதும். சொத்து பத்தெல்லாம் எதுவும் பெரிசா வேணாம் என்பதுதான் அவரது தேடலாக இருக்கிறது.

முதல் இரண்டு கல்யாணத்தையும் எப்படியோ முடித்த வடிவேலு, இவ்விரு மகள்களின் திருமணத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவது. அதுவும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் நடத்தி விடுவது என்று தீவிரம் காட்டுகிறாராம். தேர்தலுக்கு முன் இந்த திருமணத்தை முடித்துவிட துடிக்கும் அவருக்கு ஒரே கவலைதான் இப்போது. இந்த தேர்தலில் தனது பரம எதிரியான விஜயகாந்துடன், திமுக கூட்டு வைத்துக் கொண்டால் என்னாவது என்பதுதான் அது.

சில தினங்களுக்கு முன் மதுரை வரகனூரில் இருக்கும் தனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை பார்த்து திருமண பொருத்தம் பற்றி பேச வந்தவர், இந்தாளு போய் திமுக வுல சேர்ந்துருவாரா? அதையும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் என்று கேட்க, ஏரியாவில் ஒரே சிரிப்பு சப்தமாம்.

கட்டபுள்ளய கவுத்துட்டு கூட்டணி வண்டியில ஏறிடுவாரா கேப்டன்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க தம்பி! நயன்தாராவுக்காக ஒரு விசேஷ பல்டி!

முன்னாடி விழுற நிழலை வச்சே தலைக்கு பின்னாடி இருக்கிற லைட்டிங்ஸ்சில் கரெக்ஷன் சொல்வாராம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், முகத்துல டார்ச்...

Close