23 ம் புலிகேசி பார்ட் 2 டிராப்? வேறு வேறு கடைகளை ஓப்பன் பண்ணிய வடிவேலு!
சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி… அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே தஞ்சம் அடைந்தார் அவர். 23 ம் புலிகேசி பார்ட் 2 திட்டத்தோடு வடிவேலுவையும் வளைத்தார். ஆனால், வடிவேலு கேட்ட சம்பளத்தால் கிறுகிறுத்த ஷங்கர், யோசிக்கலாம்… என்று கூறி, புலிகேசியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டார். விளைவு? வடிவேலு வானம் பார்த்த பூமியாகிவிட்டார்.
மழை எப்போ வர்றது? கிளை எப்போ விடுறது? இருந்தாலும் தனது ஹீரோ ஆசையை ஷங்கர் சொல்லும் வரைக்கும் ஒத்தி வைத்திருக்கும் அவர், மீண்டும் இளம் ஹீரோக்களுடன் கும்மாளம் அடிக்க தயாராகி வருகிறார்.
சமீபத்தில் இவரை அப்ரோச் பண்ணிய படங்களில் இரண்டு படத்திற்கு ஓ.கே சைன் வந்துவிட்டதாம் வடிவேலுவிடமிருந்து. ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷுடனும், மற்றொரு படத்தில் விஜய் சேதுபதியுடனும் நடிக்கவிருக்கிறார். சம்பளம்…? ஹீரோன்னா ஒரு ரேட்டு. வெறும் காமெடின்னா ஒரு ரேட்டு.
அதிக சம்பளம் கேட்டு ஷங்கரை படுக்க வச்ச மாதிரி எல்லாரையும் படுக்க வச்சா பொழப்பு என்னாத்துக்கு ஆவறது?
To listen audio click below :-0
https://youtu.be/tDgQFl70Yv8