என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே கவுண்டரை சந்தித்து ஒரு போட்டோ எடுத்து அதையே பொக்கிஷம் போல வைத்திருக்கிறார்கள். கட்…! அந்த கவுண்டருக்கு அடுத்த படியிலிருக்கிறார் வடிவேலு. இப்போதிருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் வடிவேலு என்றால் கூட இஷ்டம்தான்.

சுராஜ் இயக்கிய படிக்காதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியதிலிருந்துதான் வடிவேலுவுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆனதாம். அதற்கப்புறம் இவர் நடிக்க வேண்டிய வேடத்தில்தான் விவேக் நடித்தார். அந்த தவறை வெகு காலத்திற்கு பிறகு உணர்ந்த வடிவேலு, தற்போது தாமாகவே முன் வந்து சுராஜ் படத்தில் நடிக்கிறார். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கத்தி சண்டை.

முன்பு போல எதையும் முகத்திலடித்து சொல்லாமல் சிரித்துக் கொண்டே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டாராம் வடிவேலு. இப்படத்தில் இன்னொரு காமெடியனாக சூரியும் நடிக்கிறார் என்ற தகவலை வடிவேலு காதுக்கு கொண்டு போனாராம் சுராஜ். அவரிடம், “அந்த தம்பி நல்லாத்தான் நடிக்கிறான். நடிக்கட்டும் நல்லா நடிக்கட்டும். ஆனா நம்ம போர்ஷனுக்குள்ள வந்துட வேண்டாம். எங்கயாவது நுழைச்சுக்குங்க. எங்கயாவது சிரிக்க வைங்க. நம்ம போர்ஷன் க்ளீனா இருக்கணும்” என்று கூறிவிட்டாராம்.

ஆக மொத்தம் கத்தி சண்டை படத்தில் வடிவேலு இருப்பார். சூரி இருப்பார். ஆனால் இரண்டு பேரும் தனித்தனியாக ஸ்கிரினில் தோன்றுவார்கள். சிரிப்பதும், சிரிக்காததும் உங்கள் பாடு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Naan Avalai Santhitha Podhu Pooja Stills

Close