தியேட்டர்ல சீட் ஆடுனா, போல்ட் அவுட்டுன்னு அர்த்தமா? ஹேய்… இதுக்கு XD ன்னு பேருப்பா!

டூரிங் டாக்கீஸ் என்றொரு காலம் இருந்தது. தரை டிக்கெட் என்பது அநேமாக இப்போதெல்லாம் இல்லவே இல்லை. மண்ணை குவித்து அதன் மேல் அமர்ந்து படம் பார்த்த காலம் தமிழ்சினிமாவின் பொற்காலம் என்கிறார்கள் வயசாளிகள். ஆனால் நாளுக்கு நாள் வளரும் தொழில் நுட்பத்தில், சினிமா மட்டுமல்ல, தியேட்டர்களும் மெருகேறி படம் பார்க்கிற ரசிகனும் ஒரு புது அனுபவத்தோடு வெளியே வருகிறான். அப்படியொரு அனுபவத்தைதான் ரசிகனுக்கு தரவிருக்கிறது எக்ஸ் டி. என்ற புதிய தொழில் நுட்பம்.

உட்கார்ந்திருக்கிற சீட் ஆடினால், நாலு போல்ட் அவுட் என்று அர்த்தம். நல்லா குனிஞ்சு பாருப்பா… ஏதாவது ஆணி கழண்டு கிடக்கும் என்றெல்லாம் கூட கமென்ட் அடித்த காலத்திற்கும், அப்படிப்பட்ட சேர்களுக்கும் விடுதலை கொடுத்துவிட்டது எல்லா தியேட்டர்களும். ஆனால் இந்த எக்ஸ் டி தொழில் நுட்பத்தில் உட்கார்ந்திருக்கிற நாற்காலி ஆடும். அதுவும் முன்னும் பின்னும் வேறொரு திசையிலும். முப்பரிமாண சினிமா மாதிரி இது முப்பரிமான ஆட்டம் என்று கூட சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் இதில் படம் பார்க்கிற சுகமே அலாதி. அந்த அனுபவத்தை தருவதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவின் 3-வது தளத்திலும், சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் 2-வது தளத்திலும், கோவையில் ப்ருக்பீல்ட் மாலிலும் அமைந்துள்ளது இந்த எக்ஸ்டி தொழில் நுட்ப தியேட்டர்கள்.

முதன் முறையாக ரஜினியின் கோச்சடையான் திரைப்படத்தின் ட்ரெய்லரை இந்த தியேட்டரில் திரையிடப் போகிறார்களாம். இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் பிலிம் என்ற பெருமையோடு வரப்போகும் இந்த படத்தை இது போன்ற தியேட்டர்களில் பார்க்கும்போது என்ன நேரிடும்?

திரையில் குதிரை ஓடினால் உங்கள் நரம்புகளில் புடைப்பெடுக்கும். ஹீரோ கத்தி வீசினால், நீங்கள் தலையை குனிந்து கொண்டு ஐயோவென அலறுவீர்கள். ரஜினி தீபிகாபடுகோனைவை கட்டி அணைத்தால்…?

உங்கள் காதுகளில் பட்டாம்பூச்சி ஓடும். பூமி நழுவும். கழுத்தெல்லாம் வியர்த்து கண்கள் செருகும். இத்தனைக்கும் காரணம், அந்த பாழாய் போன ஆடுற நாற்காலியும் அற்புதமான சவுண்ட் மேஜிக்கும்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்குள் படமே முடிந்திருக்கும்.

கூடுதல் விவரங்களுக்கு 96 26 26 26 16

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ROMEO JULIET STILLS

[nggallery id = 474]

Close