வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டானாம்! எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்கப்பா?

‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’! சற்றே மாநிறமாக இருக்கும் அபிநேந்திரன் தான் இயக்குகிற படத்திற்கு இப்படியொரு தலைப்பை வைத்திருப்பது பெரிய குறையொன்றுமில்லை. ஆனால் படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ரவிவர்மன் வெள்ளைதான்! இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களை விரல் விட்டு எண்ணினால், நம்ம ரவிவர்மனுக்கும் ஒரு விரல் நிச்சயம்! அப்படியொரு முக்கியமான ஒளிப்பதிவாளர், இந்த படத்திற்காக பணம் போட்டிருக்கிறார் என்பதே படத்தை பற்றிய மதிபீட்டை ஒரு ஸ்டெப் மேலே உயர்த்தி வைக்கிறது.

இந்த படம் குறித்து பேசியதை விட, இந்த படத்திற்குள் நான் எப்படி வந்தேன் என்பது குறித்து நிறைய பேசினார் ரவிவர்மன். இவர் ராஜீவ் மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த காலத்தில், அதே செட்டில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தவர் இந்த அபிநேந்திரன். இருவரும் நண்பர்கள் ஆனது எப்படி? ரவிவர்மன் சொல்கிறார் இப்படி.

எனக்கு யார் குறை சொன்னாலும் பிடிக்காது. அதை ஏத்துக்கவும் மாட்டேன். ஆனால் ராஜீவ் மேனனிடம் நான் இருந்த காலத்தில், என்னிடம் தைரியமாக இன்னைக்கு நீ செட்ல இந்த விஷயம் பண்ணினே. அது தப்புன்னு சொல்ற ஒரே ஆள் அபிதான். ஆரம்பத்தில் இந்தாளு என்ன இப்படி சொல்றது என்று நினைத்தாலும், அவர் சொன்னது சரிதான் என்பது அதற்கப்புறம் தெரியும் எனக்கு. தப்பை சுட்டிக்காட்ட ஒரு ஆள் பக்கத்துல இருக்கறது தப்பு இல்லேன்னு தோணுச்சு. அன்றிலிருந்து இன்று வரை நாங்க ரொம்ப நல்ல நண்பர்களா இருக்கோம். இந்த படத்தின் கதையை அவர் எங்கிட்ட சாதாரணமா சொன்ன போது கூட நானும் இதுல பார்ட்னர் ஆவேன்னு நினைக்கல. அதற்கப்புறம் எல்லாம் முடிந்து நானும் டேக் ஓவர் பண்ணிகிட்ட பிறகு, வழக்கம் போல எனக்குள்ள இருக்கிற தொழிலாளி முழிச்சுகிட்டான்.

செட்ல பிரண்ட்ஷிப்புக்கு வேலையில்ல. எல்லாம் சரியா இருக்கணும்னு நினைச்சேன். கொஞ்சம் கூட கோபிக்காமல் எல்லாத்துக்கும் ஒத்துழைச்சார் அபி. படத்தை நான் பார்த்துட்டேன். ரொம்ப பிரமாதமா இருக்கு என்றார் ரவி வர்மன்.

தமிழ்சினிமாவின் நல்ல இசையமைப்பாளர் என்ற அடையாளத்தை காதல் படத்தின் மூலம் பெற்ற ஜோஷ்வா ஸ்ரீதர், எந்த போர்வைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வரப்பட்டாரோ? இந்த படத்திற்கு அவர்தான் இசை. மீண்டும் காதல் வயப்படுவீர்கள்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பல கோடி கைமாற்று? கால்ஷீட் தராமல் ஏமாற்று! தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்?

சமீபகாலங்களில் விஜய்யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தாமாகவே முன் வந்து உதவிய அவரது பெருந்தன்மை, டி.ராஜேந்தரால் மட்டுமல்ல,...

Close