விஜய் மகேஷ்பாபு ஒரே படத்தில்! என்ன சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்?

மகேஷ்பாவுக்கு தெலுங்கில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. விஜய்க்கு தமிழில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசுக்கும் தனி மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்தால், அது எத்தனை கோடியை அள்ளும்? கேட்கும்போதே நாக்கில் ஜலம் ஊறி, அது அக்கவுன்ட் வைத்திருக்கும் பேங்கையே மூழ்கடிக்கும் என்பது பணமுள்ள தயாரிப்பாளர்களுக்கு தெரியாதா என்ன?

அப்படியொரு நரி-திராட்சை கேள்வியை நேற்றைய ஸ்பைடர் பிரஸ்மீட்டில் எழுப்பி சலசலக்க வைத்தார் ஒரு பத்திரிகையாளர். விஜய்-மகேஷ்பாபுவை ஒரே படத்தில் நடிக்க வைத்து படம் எடுப்பீங்களா? இதுதான் முருகதாசிடம் கேட்கப்பட்ட கேள்வி.

“ஒரு சீன் சொன்னா, அதை பிரமாதப்படுத்திக் கொடுக்கிற திறமை ரெண்டு பேர்ட்டயும் இருக்கு. சும்மா நடந்து வரச் சொன்னால் கூட, அதிலேயும் ஒரு ஸ்டைலை கொண்டு வந்திருவாங்க. அப்படியொரு வாய்ப்பு கிடைச்சா நான் தயார்தான். ஏன்னா, தமிழ் தெலுங்குல இருக்கிற டாப் ஹீரோக்களை ஒண்ணா வச்சு படம் பண்ணினால் அது இந்தி மார்க்கெட்டை விட பெரிசா இருக்கும்”.

“என்ன ஒரு பிரச்சனைன்னா ஸ்கிரீன் ஸ்பேஸ்தான். தெலுங்குல விஜய் சாருக்கு ரெண்டு பாடல் காட்சி வச்சா தெலுங்கு ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்க. இங்க மகேஷ்பாபு சாருக்கு ரெண்டு பாடல் காட்சி வச்சா விஜய் ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு ஒரு அச்சம் இருக்கு. அது மட்டும்தான்” என்றார் முருகதாஸ்.

அருமையான கேள்வி. அதைவிட அருமையான பதில்.

https://youtu.be/Ucbfg9Z2X1Y

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிச்சுவா கத்தி – விமர்சனம்

Close