சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார்! விஜய் ஆன்ட்டனி செய்து முடித்தார்!

‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா…” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும். தமிழ்சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிற எல்லாருக்குமே ரஜினி இடத்தை பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அந்த கொடுப்பினை சிலருக்கு திடீரென வாய்த்து விடுவதுதான் சரஸ்வதி சபதத்தையும் மிஞ்சிய திரைக்கதை!

அந்த இடத்தை சிவகார்த்திகேயனின் ரெமோவும் பிடித்துவிட்டது. விஜய் ஆன்ட்டனியின் சைத்தானும் பிடித்துவிட்டது. அதாவது நாம் சொல்ல வந்தது ரஜினி இடத்தையல்ல. கபாலி பேனர் வைத்திருந்தார்களே… அதே இடத்தை. அதே பெரிய சைஸ் பிரமாண்டத்தை. யெஸ்… விஜய் ஆன்ட்டனி நடிப்பில் வெளிவந்திருக்கும் சைத்தான் படத்தின் பேனர் கபாலி பேனர் அளவுக்கு வைக்கப்பட்டுவிட்டது. இதற்காக பெறப்பட்ட ரூபாயும், தரப்பட்ட ரூபாயும் பெருசுதான். சந்தேகமில்லை.

ஆனால் அவ்வளவு செலவுக்கும் தகுதியான படம்தான் சைத்தான் என்பதை அப்படத்தின் ஸ்கிரீனிங் சொல்லியிருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 1300 ஸ்கிரீன்களிலும், தமிழகத்தில் மட்டும் 400 ஸ்கிரின்களையும் ஓப்பன் பண்ணியிருக்கிறார்கள்.

சமயங்களில் ரிசர்வ் பேங்க்கை கூட, ஏடிஎம் ன் சின்ன வாசலுக்குள் அடக்கிவிடுவதுதான் ரசிக மனங்களின் சூட்சுமம்!

https://youtu.be/pNZQ3ZHwvAA

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Bala Kailasam Memorial Awards (BKMA) 2016 – Stills Gallery

Close