படப்பிடிப்பில் படு மோசம்! விஜய் ஆன்ட்டனியை விமர்சிக்கும் துணை நடிகர்கள்

முதல் படமே வெற்றி என்றால் இரண்டாவது படத்திற்கு எதிர்பார்ப்பு எகிரும்தானே? தனக்கு தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு அல்லும் பகலும் ஒரே சிந்தனையாக இருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. தனக்கேற்ற கேரக்டர்களை மட்டுமே பிளான் பண்ணி நடிக்கும் அவர், தனது இசை தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு முழு நேர நடிகர் ஆகிவிடுவார் போலிருக்கிறது.

அதுமட்டுமல்ல, அவர் முழு நேர தயாரிப்பாளராகி விட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அதற்கேற்ற சூட்சுமம், கை சுருக்கம் எல்லாமே அவருக்கு வந்துவிட்டதாக காதை கடிக்கிறார்கள் இவர் தயாரித்து வரும் சலீம் படப்பிடிப்பில் நடித்துவரும் துணை நடிகர்கள். அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடும் அவர்கள், ‘பல வருடங்களுக்கு முன் வந்த ஒரு படத்தில் உலக மகா கஞ்சனாக நடித்திருப்பார் சுருளிராஜன். விட்டால் அவரையே விஜய் ஆன்ட்டனி மிஞ்சினாலும் ஆச்சர்யமில்லை’ என்றார்கள். ஏன் இப்படியொரு கெட்டப்பெயர்?

வேறொன்றுமில்லை, மிக முக்கியமான அத்யாவசியமான நடிகர்களை தவிர மற்ற அனைவரையும் கையேந்தி பவன் ரேஞ்சுக்கு ட்ரீட் செய்கிறார்களாம். சில முறை இப்படியும் நடந்திருக்கிறது. ‘நீங்களே போய் உங்க செலவுல லஞ்ச் சாப்பிட்டுட்டு ஒரு மணி நேரத்தில் வந்துருங்க’ என்று அனுப்பி விட்டார்களாம். மதிய சாப்பாடு நிச்சயம் என்று காலையிலிருந்தே நடித்துக் கொண்டிருந்தவர்கள், ‘இதென்னங்க புது பழக்கமா இருக்கு?’ என்று முணுமுணுத்துக் கொண்டே அருகிலிருக்கும் ஓட்டல்களை நோக்கி ஓடியதெல்லாம் தமிழ்சினிமா வரலாற்றிலேயே நடந்ததில்லை என்கிறார்கள். இப்படி பசி கடலோடி பரவசம் அடைந்தவர்கள் சும்மாயிருப்பார்களா?

வெளியே வந்து தாங்கள் நொந்த கதையை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்கள்.

Read previous post:
எந்த ஹீரோவுக்கும் கதை அறிவே இல்லை! போட்டு தாக்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்!

பிரபல திரைப்பட விமர்சகர் கேபிள் சங்கர் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார்...

Close