ஜீவா – நயன்தாரா ஜோடி சேரும் புதுப்படம்! பின்னணியில் விஜய்?

நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா ஹீரோக்களில் பலருக்கு! 2006 ல் ஈ படத்தில் நயன்தாராவுடன் கூட்டு சேர்ந்த ஜீவாவுக்கு அதற்கப்புறம் அந்த அதிர்ஷ்டம் அமையவே இல்லை. கிட்டத்தட்ட நயன்தாராவும் ஜீவாவும் ஒரே சம்பள லெவலில் இருக்கிற இந்த நேரத்தில்தான் மீண்டும் நயன்தாராவுடன் கூட்டு சேர்கிற பாக்கியம் கிட்டியிருக்கிறது ஜீவாவுக்கு.

படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் அறிவிப்பார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்த ஜோடியை இணைத்து வைத்ததில் விஜய்க்கு பெரும் பங்கு உண்டு என்றும் கூறுகிறது கோடம்பாக்கம். தன்னிடம் வெகு காலமாக கால்ஷீட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும் இரட்டை தயாரிப்பாளர்களுக்காக இந்த படத்தை டிசைன் செய்து கொடுத்ததே விஜய்தானாம். அவரே ஒரு பசையுள்ள பணப்பார்ட்டியை ஏற்பாடு செய்து இவர்களுக்கு ஃபண்டிங் தரச் சொன்னாராம். அப்படியே ‘ஜீவாவை வச்சு இந்த படத்தை எடுங்க. விரைவில் நானே கால்ஷீட் தர்றேன்’ என்றும் கூறியிருக்கிறாராம்.

நலிந்த தயாரிப்பாளர்களை கை உயர்த்திவிடுவதில் அஜீத்தின் பாணியை பின்பற்றுகிறாரோ விஜய்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் புதுப்பட தலைப்பு என்னை அறிந்தால்! அடுத்த படமும் இதே நிறுவனத்திற்குதானாம்… (விவரம் உள்ளே)

அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது....

Close